Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சங்க்ரூர் » வானிலை

சங்க்ரூர் வானிலை

அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை சங்க்ரூருக்கு சுற்றுலா செல்வதற்கான உகந்த காலமாகும். இக்காலத்தில் வானிலை இனிமையாக இருப்பதால் சுற்றுலாவை எந்த ஒரு தடையுமின்றி அனுபவிக்கலாம். மேலும் பல திருவிழாக்களும் விழாச் சந்தைகளும் இந்நேரத்தில் தான் நடைபெறும். இதுவும் கூட பல சுற்றுலாப் பயணிகளை இங்கே இந்நேரத்தில் ஈர்க்கும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூலை பாதி வரை): கோடைக்காலத்தின் போது இந்த வட்டாரம் அதிக வெப்பத்துடன் வறண்டு காணப்படும். இக்காலத்தில் அதிகபட்ச வெப்ப நிலை 48˚ செல்சியசாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 24˚ செல்சியசாகவும் நிலவும்.

மழைக்காலம்

(ஜூலை மத்தியில் தொடங்கி செப்டம்பர் வரை): ஜூலை மத்தியில் இங்கு தொடங்கும் மழைக்காலம் செப்டம்பர் வரை நீடிக்கும். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் தான் மழைக்காலம் முடிந்து அடுத்த காலம் தொடங்கும் நேரமாகும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை): குளிர் காலத்தில் 7˚ செல்சியஸ் முதல் 20˚ செல்சியஸ் வரை நிலவும் வானிலை அதிக குளிருடன் இருக்கும்.