Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சராஹன் » வானிலை

சராஹன் வானிலை

சராஹனை பார்வையிட விரும்பும் சுற்றுலாப் பயணிகள், ஏப்ரல் முதல் நவம்பர் வரை பார்க்க அறிவுறுத்தப்படுகின்றனர். பருவ நிலை சாதகமாக இருந்தால், குளிர்காலத்தில் கூட சுற்றுலா பயணிகள் இவ்விடத்திற்கு சென்று வரலாம்.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூன் வரை): சராஹனின்  கோடை காலம் ஏப்ரல் முதல் தொடங்கி ஜூன் மாதம் வரை நீடிக்கும். கோடை காலத்தில் பதிவாகும் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 25 ° C மற்றும் 10 ° C ஆகும்.

மழைக்காலம்

(ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை): மழைக்காலம் ஆகஸ்ட் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் முடிவடைகிறது. இந்த காலத்தில் குறைவான மற்றும் நடுத்தர மழையை இந்த இடம் பெறுகிறது. வானிலையை ஒப்பிடும் போது பகலில் வானிலை இதமாகவும், இரவில் குளிர்ச்சியாகவும் இருக்கிறது.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் மார்ச் வரை): சராஹனில், டிசம்பர் மாதம் குளிரின் தொடக்கத்தை குறிக்கிறது. இந்த குளிர் மார்ச் மாதம் வரை நீடிக்கிறது. இமாச்சல பிரதேசத்தின் மற்ற பகுதிகளை ஒப்பிடுகையில், இங்கு குளிர் அவ்வளவு கடுமையாக இல்லை. குளிர்காலத்தில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 20 டிகிரி செல்சியஸ் மற்றும் 4 டிகிரி செல்சியஸ் என்று பதிவாகும். இந்த காலத்தில் பொதுவாக வானிலை இதமானதாக இருக்கும். ஆனால் சூரியன் மறைந்து விட்டால், வெப்ப நிலை கடுமையாக வீழ்ச்சியடையும்.