Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சதாரா » வானிலை

சதாரா வானிலை

மலைகள் சூழ்ந்திருக்க அமைந்திருப்பதால் சதாராபகுதி உற்சாகமூட்டும் பருவநிலையுடனே காணப்படுகிறது. பொதுவாக வறண்டவெப்பப்பிரதேச தட்பவெப்பம் இங்கு நிலவுகிறது. இருப்பினும் குளிர்காலத்தில் இந்த சதாராப்பகுதியில் சுற்றுலா மேற்கொள்வது சிறந்ததாக கருதப்படுகிறது.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் சதாராபகுதி மிக உஷ்ணத்துடன் உள்ளது. இக்காலத்தில்வெப்பநிலை27°C முதல்35°C வரை காணப்படுகிறது. ஆகவே மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நீடிக்கும் கோடைக்காலத்தில்இப்பகுதிக்கு விஜயம் செய்வது பயணிகளாலும் யாத்ரீகர்களாலும் தவிர்க்கப்படுகிறது.

மழைக்காலம்

ஜுன், ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் பாதி வரையிலான மாதங்களில் சதாராபகுதியில் மழைக்காலம்நிலவுகிறது.  மழைக்காலத்தில்மிதமான மற்றும் கடுமையானமழைப்பொழிவினை இப்பிரதேசம் பெறுகிறது. மழை உங்களுக்கு பிடிக்குமெனில் இக்காலத்தில் சதாராபகுதிக்கு விஜயம் செய்யலாம். அதற்குத்தேவையான உடைகள் மற்றும் தயாரிப்புகளுடன் செல்வது நல்லது.

குளிர்காலம்

நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் குளிர்காலத்தில்சதாராபகுதிஇனிமையான விரும்பத்தக்க சூழலுடன்காணப்படுகிறது.இக்காலத்தில் வெப்பநிலை15°C  குறைந்தும்   31°C வரை உயர்ந்தும் காணப்படுகிறது.  குளிருக்கான ஆடைகளுடன் இப்பருவத்தில் சதாராவில் பயணம் மேற்கொள்வது சிறந்தது.