Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சட்னா » வானிலை

சட்னா வானிலை

சட்னா செல்ல தகுந்த காலம் குளிர்காலம் ஆகும். அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை இங்கு குளிர்காலம் நிலவுகிறது. இந்த காலத்தில் சட்னாவில் இதமான வெப்பநிலை நிலவும். அதனால் குளிர்காலத்தில் சட்னாவிற்கு செல்வது மிகவும் சிறப்பானது.

கோடைகாலம்

மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் பாதி வரை சட்னாவில் கோடைகாலம் நிலவுகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்னாவில் 40 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை இருக்கும். எனவே கேடைகாலத்தில் சட்னாவிற்குச் செல்லாமல் இருப்பது நல்லது.

மழைக்காலம்

சட்னாவில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மழைக்காலம் நிலவுகிறது. அரேபியக் கடலில் இருந்து வரும் மழை, மத்தியப்பிரதேசத்தின் மற்ற பகுதிகளில் பெய்யும் அளவிற்கு சட்னாவிலும் பெய்கிறது. குறிப்பாக ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை சட்னாவில் மழைப் பொழிவு மிக அதிகமாக இருக்கும். எனவே இந்த மாதங்களில் சட்னாவிற்குச் செல்லாமல் இருப்பது மிகவும் நல்லது

குளிர்காலம்

அக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கும் பனிக்காலத்தின் குளிர் மிகுந்த பருவங்களாக நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் அறியப்படுகின்றன. பொதுவாக சட்னாவின் குளிர்காலத்தில் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். இந்த காலத்தில் சட்னாவிற்கு சுற்றுலா மேற்கொள்வது சிறப்பானது.