Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சவன்துர்கா » வானிலை

சவன்துர்கா வானிலை

இதமான பருவநிலையை கொண்டிருக்கும் குளிர்காலமே சவன்துர்கா சுற்றுலாஸ்தலத்துக்கு விஜயம் செய்ய ஏற்ற காலமாக உள்ளது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை): கோடைக்காலத்தில் சவன்துர்கா மலைப்பகுதி வெப்பமான சூழலைக் கொண்டுள்ளது. இக்காலத்தில் வெப்ப நிலை 240C  முதல்  340C வரை காணப்படுகிறது. அதிக வெப்பம் காரணமாக பயணிகள் இங்கு கோடைக்காலத்தில் விஜயம் செய்வதை விரும்புவதில்லை.

மழைக்காலம்

(ஜுன் முதல் செப்டம்பர் வரை) : மழைக்காலத்தில் சவன்துர்கா மிகக்கடுமையான மழைப்பொழிவைப்பெறுகின்றது. இக்காலத்தில் வெளியே மலைப்பாதையில் பயணிப்பது மிக சிரமம் என்பதால் மழைக்காலத்தில் விஜயம் செய்வதை பயணிகள் தவிர்க்கின்றனர்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : குளிர்காலத்தின்போது சவன்துர்கா மலைப்பகுதியின் பருவநிலை மிக குளுமையாகவும் இனிமையாகவும் காணப்படுகிறது. வெப்ப நிலை சராசரியாக 150C  முதல்  270C வரை என்ற அளவில் உள்ளது.