Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சவாய் மாதோபூர் » வானிலை

சவாய் மாதோபூர் வானிலை

குளிர்காலமே சவாய் மாதோபூர் பகுதிக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் பருவநிலையானது குளுமை மற்றும் இனிமையான சூழலுடன் காணப்படுகிறது. அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான பருவத்தில் பெரும்பாலும் பயணிகள் இங்கு சுற்றுலா மேற்கொள்கின்றனர்.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூன் வரை): சவாய் மாதோபூர் பிரதேசம் மிகக்கடுமையான வெப்பம் நிலவும் கோடைக்காலத்தை பெற்றுள்ளது. குறிப்பாக மே மாதத்தில் தாங்க முடியாத வெப்பம் இங்கு நிலவுகிறது. மார்ச் மாத இறுதியில் துவங்கும் கோடைக்காலம் ஜூன் வரை நீடிக்கிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரை 30° C முதல் 45° C வரை வெப்பநிலை நிலவுகிறது.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை): மழைக்காலத்தில் சவாய் மாதோபூர் பிரதேசம் வெப்பத்துடன் கூடிய கடுமையான ஈரப்பதம் நிலவும் சூழலைக் கொண்டுள்ளது. ஜுன் மாத இறுதியில் துவங்கும் மழைப்பொழிவு செப்டம்பர் மாதத்தின் பாதி வரை நீடிக்கிறது. குறைவான மழைப்பொழிவு மற்றும் புயலுடன் கூடிய இடி ஆகியவற்றை சவாய் மாதோபூர் பிரதேசம் இக்காலத்தில் பெறுகிறது.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை): சவாய் மாதோபூர் பகுதி குளிர்காலத்தில் குளுமையான மற்றும் இனிமையான சூழலுடன் காட்சியளிக்கிறது. நவம்பர் முதல் பிப்ரவரி வரை இங்கு குளிர்காலம் நீடிக்கிறது. மிதமான வெப்பநிலை நிலவும் இக்காலத்தில் சராசரியாக 20° C க்கு மேல் உயர்வதில்லை. குறிப்பாக இரவு நேரத்தில் மிகக்கடுமையான குளிருடன் வெப்பநிலை 2° C அளவுக்குக்கூட குறைந்து காணப்படுகிறது.