Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சேவாகிராம் » வானிலை

சேவாகிராம் வானிலை

சேவாகிராமில் ஆண்டின் முக்கால்வாசி பருவங்களில் சூடான வறண்ட வானிலையே நிலவும்.

கோடைகாலம்

சேவாகிராமின் கோடை காலம், மார்ச் மாதம் தொடங்கி ஜூன் ஆரம்பம் வரை நீடிக்கும். இந்த காலங்களில் குறைந்த பட்சமாக 28 டிகிரியும், அதிகபட்சமாக 42 டிகிரியுமாக வெப்பநிலை நிலவும். எனவே வெயில் வாட்டிவதைக்கும் இந்த காலங்களில் சேவாகிராம் வருவதை சுற்றுலாப் பயணிகள் தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

சேவாகிராமின் மழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை குறைந்த அளவிலேயே மழை வரத்து இருக்கும். பயணிகள் இந்த காலங்களில் சேவாகிராம் சுற்றுலா வருவது சிறப்பாக இருக்கும்.

குளிர்காலம்

சேவாகிராமுக்கு சுற்றுலா வர நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான அதன் குளிர் காலமே சிறந்தது. இந்த காலங்களில் சேவாகிராமின் வெப்பநிலை 28 முதல் 15 டிகிரி வரை இருக்கும். சேவாகிராமுக்கு இந்த காலங்களில் சுற்றுலா வருபவர்களுக்கு ஒவ்வொரு நொடியும் இன்பகரமாக நகரும்.