Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷிர்டி » வானிலை

ஷிர்டி வானிலை

ஷிர்டியில் நடுநிலையான சீதோஷ்ண நிலையே காணப்படுவதால் வருடம் முழுவதும் பயணம் செய்ய ஏற்றதாகவே உள்ளது. இருப்பினும் குளிர் காலம் இந்த புனித ஸ்தலத்தை விஜயம் செய்வதற்கு மிக ஏற்ற காலமாக கருதப்படுகிறது.

கோடைகாலம்

மார்ச்சிலிருந்து மே மாதம் வரை ஷிர்டியில் கோடைக்காலம் நிலவுகிறது. இச்சமயம் வெப்பம் கடுமையாக இருக்கும் என்பதால் யாத்ரீகர்களும், பயணிகளும் இக்காலத்தில் ஷிர்டிக்கு விஜயம் செய்வதை தவிர்ப்பது நல்லது. கோடைக்காலத்தில் இங்கு வெப்பநிலை அதிகபட்சம் 40°C ஆகவும் குறைந்தபட்சம் 20°C ஆகவும் இருக்கும்.

மழைக்காலம்

இந்த யாத்ரீக பூமியில் எப்போதும் வறண்ட பருவ நிலை நிலவுவதால் மழைக்காலம் இங்கு எதிர்பார்ப்புடன்  வரவேற்கப்படுகிறது. ஜூனிலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும் மழைக்காலத்தில் ஷிர்டி ஓரளவு மழையை பெற்று பசுமையாக காட்சியளிக்கிறது. எனவே மழைக்காலமே ஷிர்டியை விஜயம் செய்து சாயி பாபாவை வணங்கவும் ஆசிரமத்தை தரிசிகவும் ஏற்ற காலம் ஆகும்.

குளிர்காலம்

ஷிர்டியில் குளிர் காலம் டிசம்பரிலிருந்து பிப்ரவரி வரை நீடிக்கின்றது. இக்காலத்தில் வெப்ப நிலை அதிகபட்சம் 32°C ஆகவும் குறைந்த பட்சம் 8°C ஆகவும் காணப்படுகிறது. சில சமயம் வெப்ப நிலை 7°C ஆக குறைந்து மிகக் குளிராகவும் காணப்படும். பல யாத்ரீகர்கள் ஷிர்டியை விஜயம் செய்ய இக்கால கட்டத்தை தேர்வு செய்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.