Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷிவனசமுத்ரா » வானிலை

ஷிவனசமுத்ரா வானிலை

ஷிவனசமுத்திரத்தை சுற்றிப் பார்க்க மழைக் காலம் மிகச் சிறந்தது. அதேபோல் ஆகஸ்ட் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களிலும் ஷிவனசமுத்திரத்திற்கு சுற்றுலா வரலாம்.

கோடைகாலம்

(ஏப்ரம் முதல் ஜூன் வரை): கோடைக்காலத்தில் ஷிவனசமுத்ரப்பகுதி மிதமான சீதோஷ்ணநிலையுடன் இனிமையான சூழலைக்கொண்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 37℃ ஆகவும் குறைந்த பட்சமாக 20℃ வெப்பநிலையும் இக்காலத்தில் நிலவுகிறது.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை): குறைந்த காலமே நீடிக்கும் மழைக்காலத்தில் ஷிவனசமுத்ரம் குறைவான மழையையே பெறுகிறது. பெருகி வழியும் நீர்வீழ்ச்சி இக்காலத்தில் பயணிகளை பெருமளவில் கவர்ந்து இழுக்கின்றது. 

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை): ஷிவனசமுத்ரம் பகுதியில் குளிர்காலத்தில் சூழலும் சீதோஷ்ணநிலையும் மிகவும் விரும்பத்தக்கதாக குளுமையுடன் காணப்படுகிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக 12℃ மற்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 31℃ காணப்படுகிறது.