Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» சிம்ஹாச்சலம்

சிம்ஹாச்சலம் - நரசிம்ஹ மூர்த்தியின் பூமி

10

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணத்துக்கு வெகு அருகில் அமைந்திருக்கும் சிறிய கிராமமான சிம்ஹாச்சலம், விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்ஹமூர்த்திக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் புகழ்பெற்ற கோயில் உள்ள ஸ்தலமாக பிரபலமாக அறியப்படுகிறது.

இதன் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ சுவாமி கோயிலில் விஷ்ணு பகவான் நரசிம்ம மூர்த்தியாக, திரிபங்க வடிவம் என்று அழைக்கப்படும் மூன்று வெவ்வேறு நிலைகளில் சந்தன பூச்சுடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

இந்தக் கோயில் நரசிம்மருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள 18 கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருவதோடு, ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்த்து வருகிறது.

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ சுவாமி கோயிலில் 1098-ஆம் ஆண்டை சேர்ந்த சோழ மன்னன் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டு ஒன்று உள்ளது. அதேசமயம் மற்றொரு கல்வெட்டு கலிங்கா ராணி வாழ்ந்த 1137 மற்றும் 1156-ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களை சேர்ந்தது.

அதுமட்டுமல்லாமல் இவைபோல நரசிம்மர் கோயிலின் சுவர்களில் 252-களுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுகள் யாவும் கோயிலின் தொன்மையை பறைசாற்றுவதோடு, தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் வரலாறு குறித்து தெளிவாக விளங்கிக் கொள்வதற்கு சிறந்த ஆதாரமாக உள்ளன.

மேலும் இந்தக் கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் ஒரிய மொழிகளில் காணப்படுவதுடன், கோயிலின் கட்டிடக் கலை பாணியும் இந்த இரு மொழிகள் சார்ந்த பகுதிகளின் கட்டிடக் கலையையே பிரதிபலிக்கின்றன. அதோடு இங்கு உள்ள குன்றில் ஒரு புனித குளியல் தொட்டி அமைக்கப்பட்டிருப்பதையும் பயணிகள் பார்க்கலாம்.

சிம்ஹாச்சலம் கிராமம் குறித்து சுவையான புராணக் கதை ஒன்று சொல்லப்படுகிறது. அதாவது சில இஸ்லாமிய கொள்ளையர்கள் இந்த கிராமத்துக்கு கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு ஊடுருவியபோது கிராம மக்களை காத்தருளுமாறு குமாரநாதன் என்ற புலவர் நரசிம்மரிடம் வேண்டிக் கொண்டார்.

இவருடைய வேண்டுதலை நிறைவேற்றி மக்களை காப்பதற்காக நரசிம்மர், குளவிக் கூட்டத்தை கொள்ளையர்கள் மீது ஏவிவிட்டு அவர்களை பயந்தோடச் செய்தார் என்று புராணம் கூறுகிறது.

சிம்ஹாச்சலம் கிராமம் வெப்பம் மிகுந்த கோடை காலத்தையும், இதமான பனிக் காலத்தையும் கொண்டிருந்தாலும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த சுற்றுலா அனுபவத்தை வழங்குகிறது. இந்த கிராமத்தை இந்தியாவின் முக்கிய நகரங்களிலிருந்து சாலை மூலமாக சுலபமாக அடையலாம்.

சிம்ஹாச்சலம் சிறப்பு

சிம்ஹாச்சலம் வானிலை

சிறந்த காலநிலை சிம்ஹாச்சலம்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சிம்ஹாச்சலம்

  • சாலை வழியாக
    ஆந்திராவின் அனைத்து நகரங்களிலிருந்தும் சிம்ஹாச்சலம் கிராமத்துக்கு எண்ணற்ற அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதோடு தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்து ஹைதராபாத், விசாகப்பட்டணம் நகரங்களுக்கு அடிக்கடி பேருந்து போக்குவரத்து உள்ளது. எனவே பயணிகள் இந்த இரண்டு நகரங்களில் ஏதாவது ஒன்றை அடைந்த பின்பு மற்றொரு பேருந்தை பிடித்து சிம்ஹாச்சலம் வந்தடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    சிம்ஹாச்சலம் கிராமத்தின் அருகாமை ரயில் நிலையமாக விசாகப்பட்டணம் ரயில் நிலையம் அறியப்படுகிறது. இந்த ரயில் நிலையம் நாட்டின் முக்கிய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே பயணிகள் இந்த ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் அல்லது பேருந்துகள் மூலம் எந்த சிரமமுமின்றி சிம்ஹாச்சலம் கிராமத்தை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சிம்ஹாச்சலம் கிராமத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் விசாகப்பட்டணம் விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து ஹைதராபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா, திருவனந்தபுரம், சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களுக்கு தினமும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த பின் வாடகை கார்கள் மூலம் சுலபமாக சிம்ஹாச்சலம் கிராமத்தை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Wed
Check Out
25 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu

Near by City