Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிந்துதுர்க் » வானிலை

சிந்துதுர்க் வானிலை

மித வறண்ட பிரதேச பருவ நிலையையும், ஈரப்பத பருவ நிலையை சேர்ந்தே கொன்டிருக்கும் புவியியல் அமைப்பை பெற்றுள்ளது சிந்து துர்க் பகுதி. ஆகவே குளிர் காலம் இங்கு விஜயம் செய்ய ஏற்ற பருவ காலம் ஆகும்.

கோடைகாலம்

கோடைக்காலம் மிகுந்த வெப்பத்துடன் காணப்படுகிறது. பிப்ரவரி மாதம் பிறபகுதியிலிருந்து மே மாதம் வரை இங்கு 32°C வெப்பநிலை யிலிருந்து அதிகபட்சம் 38°C வரை காணப்படுகிறது. ஈரப்பதமும் இக்கால கட்டத்தில் மிக அதிகமாக இருக்கும். குறிப்பாக மே மாதத்தில் உஷ்ணம் மிக அதிகமாக காணப்படும்.

மழைக்காலம்

கோடைக்காலத்திற்கு பின் வரும் மழைக்காலம் இப்பகுதியில் இனிமையான வரவேற்பை பெறுகிறது. ஜூனிலிருந்து செப்டம்பர் மாதம் வரையில் மழைக்காலம் நிலவுகிறது. அச்சமயம் தென்மேற்கு பருவக்காற்றின் மூலம் நல்ல மழைப்பொழிவை இப்பகுதி பெறுகிறது. ஆகவே மழைக்காலத்தில் இப்பகுதியில் பிரயாணம் செய்வதும் மிக சிரமமாகவே இருக்கும். அக்டோபர் மற்றும் நவம்பர் மழைக் காலங்கள் பின்மழைக்காலமாக விளங்குகின்றன. இம்மாதங்களின் சூழல் ஈரப்பதம் அதிகமாக காணப்படும்.

குளிர்காலம்

நவம்பர் பிறபகுதியிலிருந்து பிப்ரவரி மாதம் முற்பகுதி வரை விளங்கும் சிந்து துர்க் பகுதியின் குளிர்காலம் எல்லோராலும் வரவேற்கப்படுகிறது. ஏனெனில் இப்பருவ காலத்தில் தான் இப்பகுதியை சுற்றிப்பார்க்க இயலும். இக்காலத்தில் சூழல் மிக குளுமையானதாக 20-22°C வரை காணப்படும். ஆகவே குளிர்காலம் யாத்ரீகர்களும், சுற்றுலாப்பயணிகளும் சிந்துதுர்க் பகுதியை சுற்றிப்பார்க்க உகந்ததாக கருதப்படுகிறது.