Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிர்சி » வானிலை

சிர்சி வானிலை

சிர்சிக்கு அதன் பனிக் காலத்தில் சுற்றுலா வருவது சிறந்த அனுபவமாக இருக்கும். இந்த காலங்களில் சிர்சியின் வெப்ப நிலை மிக சூடாகவும் இல்லாமல், குளிராகவும் இன்றி, இதமாக இருப்பதால் சிர்சியின் கவர்ச்சி அம்சங்களை கண்குளிர காணலாம்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : சிர்சியின் கோடை காலத்தில் அதிகபட்சம் 37 டிகிரியும், குறைந்தபட்சம் 22 டிகிரியுமாக வெப்பநிலை நிலவும். எனவே இந்த காலங்களில் வெப்பநிலை மிதமானதாகவே காணப்படும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : சிர்சியின் மழைக் காலங்களில் கணிசமான அளவு மழை பெய்யும். இந்த காலங்களில் பெரும்பாலும் வெளியே போக முடியாத சூழல் நிலவுமாதலால் பயணிகள் மழைக்காலத்தில் சிர்சிக்கு வருவதை தவிர்ப்பது நல்லது.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் ஜனவரி வரை) : பனிக்காலத்தில் வெப்ப நிலை சீராக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் பனிக்காலத்தில் சிர்சியை அணுகுவதே சிறப்பானதாக இருக்கும். இந்தக் காலங்களில் சிர்சியின் வெப்பநிலை அதிகபட்சம் 32 டிகிரியும், குறைந்தபட்சம் 19 டிகிரியுமாக பதிவாகும்.