Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோலன் » வானிலை

சோலன் வானிலை

ஆண்டு முழுவதும் சோலனின் வானிலை அருமையாக இருக்கும். ஆண்டின் எந்த பகுதியிலும் இந்த எழில்மிகும் இடத்திற்கும் பிரயாணம் செய்ய பயணிகள் திட்டமிடலாம்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை): சோலன் நகரின் கோடை காலங்களில் அதிகபட்ச வெப்பநிலை 35° C, மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 15° C ஆக பதிவாகும். இந்த காலகட்டத்தில் இவ்விடத்தின் வானிலை மிதமான வெப்பம் உடையதாக இருக்கிறது, குறிப்பாக மே மாதமே அதிக உஷ்ணம் கொண்டதாக உள்ளது. எனினும், இரவு நேரங்களில் குளிர்ச்சியை உணர முடிகிறது.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : சோலன் பகுதியில் ஜூலை மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவகாற்றின் காரணமாக கடுமையான மழைப் பொழிவு இருக்கும். எனவே சோலன் நகருக்கு சுற்றுலா வர திட்டமிடும் பயணிகள் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் சுற்றுலா வரலாம்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை): சோலன் நகரின் குளிர் காலங்களில் வானிலை மிகவும் குறைந்து தட்பவெப்ப நிலை -2° C அளவுக்கு குறைகின்றது. இக்காலத்தில் பனிப்பொழிவும் காணப்படுகின்றது. இந்த காலகட்டத்தில் அதிகபட்ச தட்பவெப்ப நிலை ஏறத்தாழ 15° C இருக்கிறது.