Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோலாப்பூர் » வானிலை

சோலாப்பூர் வானிலை

சோலாப்பூர் பகுதி வறண்ட மற்றும் மித வறண்ட, ஈரப்பதமற்ற பருவநிலையை புவியியல் ரீதியாக பெற்றுள்ளது. குளிர்காலமே இங்கு விஜயம் செய்ய ஏற்ற காலமாகும். இக்காலத்தில் இப்பகுதிக்கு சுற்றுலா செல்வது ஒரு மறக்க முடியா அனுபவமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

கோடைகாலம்

சோலாப்பூரில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் இப்பகுதியில் வெப்பநிலை 30°C  முதல் 40°C வரை இருக்கும். குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாத த்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் அக்காலத்தில் இப்பகுதிக்கு பயணம் மேற்கொள்வது உகந்ததல்ல.

மழைக்காலம்

சுட்டுப்பொசுக்கும் கோடைக்காலத்திற்குப்  பிறகு வரும் மழைக்காலம் இங்கு பலத்த வரவேற்பை பெறுகிறது. மழைக்காலம் பொதுவாக ஜுனில் துவங்கி செப்டம்பரில் முடிவடைந்தாலும் மே மாத இறுதியிலேயே சோலாப்புர் நல்ல மழைப்பொழிவை பெறுகிறது. இருப்பினும் சோலாப்பூர் மழைக்காலத்தில் மிதமான மழைப்பொழிவையே பெறுகிறது. மழைப்பிரியர்கள் இக்காலத்தில் சோலாப்பூருக்கு விஜயம் செய்யலாம்.

குளிர்காலம்

சோலாப்பூரில் குளிர்காலம் நவம்பர் தொடங்கி பிப்ரவரி வரை நிலவுகிறது. இக்காலத்தில் இப்பகுதி மிக இனிமையான ஒரு சூழ்நிலையுடன் விரும்ப த்தக்கதாக திகழ்கிறது. இக்காலத்தில் வெப்பநிலை மிக க்குறைவான 10°C வரை இருக்கும். சில சமயம் அதிக பட்சமாக 37°C வரை உயரக்கூடும்.