Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோன்பத்ரா » வானிலை

சோன்பத்ரா வானிலை

நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரையிலான பருவமே சோன்பத்ராவிற்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் பருவ நிலை இதமாகவும் இனிமையாகவும் காட்சியளிக்கிறது. மற்ற காலங்களில் அதிக வெப்பம் மற்றும் வறட்சியுடன் இப்பகுதி காணப்படுகிறது.   

கோடைகாலம்

(மார்ச்  முதல் மே வரை) : மார்ச் முதல் மே வரை கோடைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் அதிகபட்சம் 45°C  வரை வெப்பநிலை செல்லக்கூடும். உஷ்ணக்காற்றுகளும் இக்காலத்தில் வீசுகின்றன.

மழைக்காலம்

(ஜுலை முதல் செப்டம்பர் வரை) : ஜுலை முதல் செப்டம்பர் வரை மழைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் இங்கு கடும் மழைப்பொழிவு நிலவுகிறது. மேலும் நகர்ப்பகுதி ஈரமாகவும் சூழலில் ஈரப்பதம் நிரம்பியும் காணப்படும். விட்டுவிட்டு கனமழையும் பெய்யக்கூடும்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : குளிர்காலம்  டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நிலவுகிறது. இதமான இனிமையான சூழல் இக்காலத்தில் காணப்படுகிறது. குளிர்காலத்தில் 12°C  துவங்கி 25°C  வரை வெப்பநிலை நிலவுகிறது.