Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோனிபட் » வானிலை

சோனிபட் வானிலை

கோடைகாலம்

சோனிபட்டில் கோடைகாலம் மார்ச் மாதம் தொடங்கி மே வரை நீடிக்கிறது. இங்கு கோடை காலத்தின் அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை முறையே 44 மற்றும் 25 டிகிரி செல்ஸியஸ் ஆகும். இங்கு மே மாதமே மிக வெப்பமான மாதமாகும். மேலும் சில ஆண்டுகளில் கோடை காலம் ஜூன் மாதத்தின் நடுப்பகுதி வரை நீண்டு விடுகிறது.

மழைக்காலம்

சோனிபட்டில் ஜூலை மாதத்தில் தொடங்கும் பருவமழை  செப்டம்பர் வரை நீடிக்கிறது. மேலும் இந்தக் காலத்தில் இங்கு ஈரமான மற்றும் ஈரப்பதமான வானிலை நிலவுகிறது. இங்கு ஆகஸ்ட் மாதத்தில்  மிக அதிக மழைப்பொழிவு ஏற்படுகிறது.

குளிர்காலம்

சோனிபட்டில் நவம்பரில் தொடங்கும் குளிர்காலம் மார்ச் வரை நீடிக்கிறது. சோனெபட்டின் குளிர்காலம் லேசானது  மற்றும் இனிமையானது. இங்கு குளிர்காலத்தின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை முறையே 25 மற்றும் 9 டிகிரி செல்ஸியஸாக பதிவாகிறது. இங்கு இந்தப் பருவத்தில்  இனிமையான மற்றும் லேசான வானிலை நிலவுவதால் இந்தப் பருவமே சோனெபட்டை பார்க்க மிகவும் உகந்த பருவம் ஆகும்.