டோம்பேவாரே எனும் இந்த அழகிய ஏரியானது ‘ஈமான் அசாக்கிரே’ எனும் சிறு கிராமத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகையே 113 பேர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மலையுச்சியின் மீது அமைதியாக வீற்றிருக்கும் டோம்பேவாரே ஏரி பலவித மர்மங்கள் நிறைந்ததாக கூறப்படுகிறது. உள்ளூர் கதைகளின்படி மீன்மனிதன் ஒருவன் இங்கு வசித்த ஒரு அழகிய மணமான பெண்ணை விரும்பியதாகவும் பின்னர் அப்பெண்ணின் கொடுமையான கணவனிடமிருந்து அவளை காப்பாற்றி அழைத்துச்சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இன்றும் அந்தப்பெண் இந்த குளத்தின் அடியில் வசிப்பதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.
சாலை வசதிகள் ஏதுமற்ற தூரப்பிரதேசத்தில் அமைந்திருக்கும் இந்த ஏரியை சென்றடைவது சிரமமான பயணமாகவே இருக்கும். 4 மணி நேரம் நடந்து ‘ஈமான் அசாக்கிரே’ கிராமத்தை அடைந்தபின் மீண்டும் ஒன்றரை மணி நேரம் நடந்துதான் இந்த ஏரியை சென்றடைய முடியும்.
இருப்பினும் இந்த மலையேற்றப்பயணத்தின் இறுதியில் காணக்கிடைக்கும் இயற்கை எழிற்காட்சிகள் அந்த சிரமங்களை எல்லாம் மறக்கடித்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.



Click it and Unblock the Notifications