நெங்கோங் என்றழைக்கப்படும் இந்த இடம் மேகாலயா மாநிலத்தில் உள்ள ஒரு பிரசித்தமான சுற்றுலாத்தலமாகும். இங்கு மூன்று மலைக்குகைகள் அமைந்திருக்கின்றன. இவற்றில் முக்கியமான டெடங்கோல் பல்வாகோல் குகை 5.33 கி.மீ நீளமுடையதாகும். இது இந்திய துணைக்கண்டத்திலேயே இரண்டாவது நீளமான குகையாக கூறப்படுகிறது.
ஏனைய இரண்டு குகைகளில் ஒன்றான தொப்பாகோல் சிபே நளா எனப்படும் குகை 2 கி.மீ நீளம் உடையதாக சிபே நளா ஆற்றில் அமைந்திருக்கிறது. மற்றொரு குகையான பொக் பாக் தொப்பாகோல் 1 கி.மீ நீளத்தில் காணப்படுகிறது. இந்த குகைகள் யாவுமே சாகச விரும்பிகளுக்கு பிடித்த சுற்றுலா அம்சங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நெங்கோங் சுற்றுலாத்தலம் பக்மாரா நகரத்திலிருந்து 14 கி.மீ தூரத்தில் உள்ளது. பக்மாராவில் உள்ள பயணிகள் விடுதியில் சுற்றுலாப்பயணிகள் தங்கிக்கொள்ளலாம்.
பக்மாரா நகரத்திலிருந்து வாடகை டாக்சிகள் மூலம் பயணிகள் நெங்கோங் ஸ்தலத்திற்கு வந்து சேரலாம். டுரா நகரத்திலிருந்து 132 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் நெங்கோங் சுற்றுலாத்தலத்திற்கு டுராவில் இருந்தே சுற்றுலா வாகனங்கள் மூலம் வரலாம்.



Click it and Unblock the Notifications