சிஜு எனும் பிரசித்தமான இந்த குகை அமைப்பு சிம்சங் ஆற்றை ஒட்டி அமைந்திருக்கிற்து. இது தொபாக்கோல் அல்லது வௌவால் குகை என்று உள்ளூர் மொழியில் அழைக்கப்படுகிறது.
ஸ்டாலக்சைட் மற்றும் ஸ்டாலக்மைட் எனப்படும் சுண்ணாம்பு பாறை படிமங்களால் இந்த குகை உருவாகியிருக்கிறது. இந்தியாவிலேயே மிக நீளமான குகையான இதன் உள்ளே ஆற்று நீரோட்டங்களின் பாதைகள் காணப்படுகின்றன.
பிரமிக்க வைக்கும் இயற்கை அதிசயமான இது இந்திய சுற்றுலா பிரியர்கள் அவசியம் காண வேண்டிய ஒன்று என்பதில் சந்தேகமேயில்லை. முதல் முறை தரிசிக்கும் எவரையும் இந்த குகையின் பிரம்மாண்ட தோற்றம் திகைக்கவைத்து விடுகிறது.
இந்த குகைக்கு அருகிலேயே சிம்சங் ஆற்றின் மறுகரையில் சிஜு பறவைகள் சரணாலயம் அமைந்திருக்கிறது. இங்கு பலவிதமான அரிய பறவை இனங்கள் மற்றும் விலங்கினங்கள் வசிக்கின்றன. குளிர்கால மாதங்களில் இங்கு புலம் பெயர்ந்து வரும் சைபீரிய வாத்துகளை பார்க்கலாம்.
இந்த பறவைகள் சரணாலயத்தின் நுழைவுப்பகுதிக்கு அருகே ஒரு செங்குத்தான மலைப்பகுதியில்1 கி.மீ தூரம் ஏறிச்சென்றால் வித்தியாசமான பாறைப்படிமங்களை பார்த்து ரசிக்கலாம். இந்த பாறைப்படிவங்கள் பல்வேறு வடிவங்களில் இயற்கையின் படைப்புகளாக பிரமிக்க வைக்கும் அழகுடன் வீற்றிருக்கின்றன.
பக்மாரா நகரத்திலிருந்து வாடகை டாக்சிகள் மூலம் பயணிகள் சிஜு குகை ஸ்தலத்திற்கு வந்து சேரலாம்.



Click it and Unblock the Notifications