சௌத் கரோ ஹில்ஸ் மாவட்டத்தின் மையப்பகுதியில் பாயும் சிம்சங் ஆறு இம்மாவட்டத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்கிறது. பங்களாதேஷ் நாட்டில் இந்த ஆறு சோமேஷ்வரி என்றழைக்கப்படுகிறது. நோக்ரெக் சிகரத்தில் சிறு ஊற்றாக துவங்கும் சிம்சங் ஆறானது வழியில் தன்னை பெரிதாக்கிக்கொண்டு ரிங்க்டி, ரொம்பா, ரொங்டிக் மற்றும் சிபோக் எனும் துணையாறுகளையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு ஓடிவருகிறது.
இந்த ஆறு தன் வழியில் ரொங்ரேன்கிரிரி, வில்லியம்நகர், நொங்கால்பிப்ரா, ரேவாக், சிஜு மற்றும் பக்மாரா போன்ற முக்கிய நகரங்களையும் கடந்து வருகிறது.
சிம்சங் ஆறு படகுப்போக்குவரத்து வசதியையும் அளிக்கிறது. சிறு படகுகள் மற்றும் ஜெட் ஸ்கி படகுகள் போன்றவை இந்த ஆற்றில் பயணிகளுக்காக வாடகைக்கு கிடைக்கின்றன.
ஆற்றில் படகுகளில் பயணித்தபடி இப்பகுதியின் பள்ளத்தாக்குகளை ரசிப்பது பயணிப்பது ஹாலிவுட் படக்காட்சி அனுபவத்திற்கு இணையானதாக இருக்கும். ஆற்றின் ஒவ்வொரு வளைவும் ரகசியமான மற்றொரு இடத்திற்கு இழுத்துச்செல்வது போல் அமைந்திருக்கிறது.
இந்த ஆற்றில் ‘எலக்ட்ரிக் ஈல்’ என்றழைக்கப்படும் ‘மின் விலாங்கு மீன்’கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது. மீன்பிடிக்கும் பொழுதுபோக்குக்கு ஏற்ற இடமாக இந்த ஆறு புகழ் பெற்றுள்ளது.
ஆற்றைச்சுற்றியுள்ள கிராமங்களில் ‘நதோக் வாரி’ எனப்படும் வருடாந்திர மீன்பிடி திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா குளிர்கால மாதங்களில் நடத்தப்படுகிறது. இந்த சிம்சங் ஆற்றை பார்த்து ரசிப்பதற்கு செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்கள் ஏற்றவை.



Click it and Unblock the Notifications