Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஸ்ரீரங்கம் » வானிலை

ஸ்ரீரங்கம் வானிலை

தட்பவெப்பநிலை மிகக் குறைந்து காணப்படும் அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டமே, இங்கு செல்வதற்கு உகந்த காலகட்டமாகும். இச்சமயத்தில், இங்கு வானிலை இனிமையாக இருப்பதனால், பல திருவிழாக்களும் இக்காலகட்டத்தில் இங்கு நடைபெறுகின்றன. இம்மாதங்களில், இங்கு பக்தர்களின் வருகை அதிகபட்சமாக இருக்கும்.

கோடைகாலம்

ஸ்ரீரங்கத்தில் மண்டல வானிலையே நிலவுவதால், கோடைகள் வெப்பமாகவும், ஈரப்பதத்துடன் காணப்படுகின்றன. கோடைகாலத்தில் அதிகபட்ச தட்பவெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் வரை செல்லும். மார்ச், ஏப்ரல், மற்றும் மே மாதங்கள் கோடைகால மாதங்களாகும். நண்பகல் சூரியன் சுட்டெரிக்குமாதலால், வெளியே செல்வது கடினம். ஆனால், சாயந்தர வேளைகள் ரம்மியமாகவே இருக்கும்.

மழைக்காலம்

ஸ்ரீரங்கத்தில், மழைக்காலம் ஜூன் மாதத்தில் ஆரம்பித்து செப்டம்பர் கடைசி வரை நீடிக்கும். இக்காலத்தில், இங்கு மிதமானது முதல் கடும் மழை வரை பெய்யும். இங்கு, 835 மி.மீ தான் அதிகபட்சமாக பதிவு செய்யப்பட்ட மழைப்பொழிவாகும். இச்சமயத்தில், இங்கு தட்பவெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து, காற்றில் ஈரப்பதத்தின் அளவு அதிகரிக்கும்.

குளிர்காலம்

குளிர்காலம், நவம்பர் மாதக் கடைசியில் ஆரம்பித்து, பிப்ரவரி மாத நடுப்பகுதி வரை நீடிக்கும். ஆனால், இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் இருப்பதைப் போல் அதீத குளிருடன் இல்லாமல், மிதமான குளிர்ச்சியுடன் விளங்கும். இச்சமயத்தில், இங்கு தட்பவெப்பநிலை, அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ்க்கு மிகாமலும், குறைந்த பட்சமாக 21 டிகிரி செல்சியஸாகவும் இருப்பதனால், வானிலை மிகவும் ரம்மியமாக இருக்கும்.