Search
  • Follow NativePlanet
Share

ஸ்ரீரங்கம் – கோயில்களின் தீவு!

16

ஸ்ரீரங்கம், தென்னிந்தியாவின் தமிழகத்திலுள்ள, திருச்சி என்றழைக்கப்படும் திருச்சிராப்பள்ளியில், அமைந்துள்ள, மனதை தன் வசப்படுத்தக்கூடிய கண்கவர் தீவு நகரமாகும். ஸ்ரீரங்கம், பழங்காலத்தில், “வெள்ளித்திருமுத்தகிராமம்” என்று வழங்கப்பட்டுள்ளது. தமிழில், இந்நகரம் “திருவரங்கம்” என்றே பிரபலமாக அழைக்கப்படுகிறது.

ஸ்ரீரங்கம் நகரம், காவேரி மற்றும் அதன் கிளை நதியான கொள்ளிடம், ஆகிய இரு ஆறுகளுக்கும் இடையே அமைந்துள்ளது. புகழ்பெற்ற சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் இங்கு அமைந்துள்ளதால், ஸ்ரீரங்கம் இந்து யாத்ரீகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

இன்னும் சொல்லப்போனால், ஸ்ரீரங்கத்தில், விஷ்ணுவை வழிபாடு செய்யும் ஸ்ரீவைஷ்ணவர்கள் மிக அதிகம் உள்ளனர். ஸ்ரீரங்கநாதஸ்வாமி கோயில், இங்குள்ள மிகப் பிரபலமான கோயில்களுள் ஒன்றாகும்.

வருடந்தோறும் மகாவிஷ்ணுவின் அருளை வேண்டி, ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இக்கோயில், உலகெங்கிலும் உள்ள இந்துக் கோயில்களுள் பெரிய அளவில் செயல்படும் கோயிலாக, நம்பப்படுகிறது. இக்கோயில் சுமார் 631,000 சதுர அடியில், சுமார் 4 கி.மீ. அல்லது 10,710 அடி சுற்றளவில் கட்டப்பட்டுள்ளது.

தெய்வங்களின் உறைவிடம்

ஸ்ரீரங்கம், மகாவிஷ்ணுவின் எட்டு முக்கிய திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகக் கொண்டாடப்படும் தனிப்பெருமை வாய்ந்ததாகும். இந்த சுயபிரகடனப்படுத்தப்பட்ட திருத்தலங்களை “ஸ்வயம் வ்யாக்த ஷேத்ராஸ்” என்று இந்து புராணங்கள் குறிப்பிடுகின்றன.

ஸ்ரீரங்கத்திலுள்ள விஷ்ணு கோயில், இத்திருத்தலங்களுள் முதலாவது மட்டுமல்ல; 108 விஷ்ணு கோயில்களுள் மிக முக்கியமான கோயிலாகவும் கருதப்படுகிறது. இந்த விஷ்ணு கோயில், சுமார் 156 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள மிகப் பிரம்மாண்டமான கோயிலாகும்.

இக்கோயிலின் அமைப்பு மிக அரிதானதாகும்; இது காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளினால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டில் அமையப்பெற்றுள்ளது. இக்கோயிலில், ‘பிரகாரங்கள்’ என்றழைக்கப்படும் இணைப்புகள், சுமார் ஏழு உள்ளன. பக்தர்கள் இவ்வத்தனை பிரகாரங்களையும் கட்டாயமாக வலம் வருகின்றனர்.

இப்பிரகாரங்கள், மிகப் பிரம்மாண்டமான, திண்மையான சுவர்களால் சந்நிதியைச் சுற்றி வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. இப்பிரகாரங்களில், சுமார் 21 கோபுரங்கள் கம்பீரமாக நிற்கின்றன. இப்பிரகாரங்களின் முழு வடிவமும், சிறப்பான கட்டிடக் கலைக்கு சான்றாக அழகுடன் மிளிர்கின்றது.

அச்சு அசலான கோயில் நகரம்

காவேரி காரையில் அமையப்பெற்றுள்ள 3 முக்கிய விஷ்ணு கோயில்களில் ஸ்ரீரங்கம் கோயிலும் ஒன்றாக கருதப்படுகிறது. மற்ற 2 கோயில்கள் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள ஆதி ரங்கா கோயில் மற்றும் ஷிவனசமுத்ராவிலுள்ள மத்திய ரங்கா கோயில்கள் ஆகும்.

மலைக்கோட்டை கோயில், திருவானைக்கோவில் திருக்கோயில், உறையூர் வெக்காளி அம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், குமார வையலூர் கோயில், மற்றும் காட்டழகிய சிங்கர் கோயில் ஆகியன, இப்பகுதியில் உள்ள பிரபலமான மற்ற சில கோயில்களாகும்.

அப்பளரங்கநாதரை, மூலவராகக் கொண்டுள்ள, “ஸ்ரீ வடிவழகிய நம்பி பெருமாள் கோயில்”, இப்பகுதியில் உள்ள மற்றுமொரு பிரபலமான விஷ்ணு கோயிலாகும். “அப்புக்குடத்தான் கோயில்” என்பது இக்கோயிலின் இன்னொரு பெயராகும்.

இக்கோயில், ஸ்ரீரங்கத்துக்கு மிக அருகில் உள்ள ‘கோவிலாடி’ என்ற ஊரில் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கத்துக்கு அருகில் உள்ள புகழ் பெற்ற இன்னொரு விஷ்ணு கோயில், “அழகிய நம்பி திருக்கோயில்” ஆகும். இக்கோயில், ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயிலின் உட்பிரிவாகும்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பல கோயில்களைக் கொண்டுள்ள ஸ்ரீரங்கம், இந்துக்களின் முக்கியமான வழிபாட்டுத் தலமாகக் கருதப்படுவதில், ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

ஸ்ரீரங்கத்தில் உள்ள மற்ற சில முக்கியமான கோயில்கள், ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், ஜம்பு லிங்கேஷ்வரர் உடனுறை அகிலாண்டேஷ்வரி திருக்கோயில், ஆகியனவாகும்.

வானிலை மற்றும் இங்கு செல்லக்கூடிய வாய்ப்புகள்

இப்பகுதி, வெப்பமான கோடைகால மாதங்கள், மிதமான மழை, மற்றும் அதீத குளிர் இல்லாத, ரம்மியமான குளிர்காலங்கள், ஆகியவற்றைக் கொண்டு விளங்குகிறது. ஸ்ரீரங்கத்திலேயே ஒரு ரயில் நிலையம் உள்ளது.

திருச்சி செல்லும் பேருந்துகள் மூலமாக, இவ்வூரை சாலை வழியாகவும் அடையலாம். இந்நகருக்கு அருகில் அமைந்துள்ள விமான நிலையம், திருச்சி விமான நிலையம் ஆகும்.

ஸ்ரீரங்கம் சிறப்பு

ஸ்ரீரங்கம் வானிலை

சிறந்த காலநிலை ஸ்ரீரங்கம்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஸ்ரீரங்கம்

  • சாலை வழியாக
    திருச்சி வழி செல்லும் பேருந்துகள் மூலம், சாலை வழியாக ஸ்ரீரங்கத்தை அடையலாம். தென்னிந்தியாவின் முக்கிய பெருநகரங்கள் மற்றும் சிறுநகரங்களான, சென்னை, கன்னியாக்குமரி, ஹைதராபாத், பெங்களூரு, கோயம்புத்தூர், மைசூர், மங்களூர், கொச்சி, ராமேஸ்வரம், தஞ்சாவூர், மதுரை, சிதம்பரம், தூத்துக்குடி, கொல்லம், தென்காசி, திருப்பதி ஆகியவற்றுக்கு சீரான இடைவெளிகளில், ஏராளமான பேருந்து சேவைகள் உள்ளன. டெல்லியிலிருந்து திருச்சிக்கு சிறப்பு பேருந்து சேவைகளும் உள்ளன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ஸ்ரீரங்கத்தில் ஒரு இரயில் நிலையம் உள்ளது. சென்னையிலிருந்து, சென்னை-கன்னியாக்குமரி தடத்தில் செல்லும் இரயில்கள் அனைத்தும், இங்கு நிற்கும். சென்னையும், கன்னியாக்குமரியும் இரயில்கள் மூலம் இந்தியாவின் பல்வேறு பெருநகரங்களுடனும், சிறுநகரங்களுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து, கன்னியாக்குமரிக்குச் செல்லும் இரயில் மூலம் ஸ்ரீரங்கத்துக்குச் செல்லலாம். அதே போல், ஊர் திரும்புவதற்கு, கன்னியாக்குமரியிருந்து சென்னை செல்லும் இரயிலைத் தேர்ந்தெடுக்கலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    திருச்சியிலுள்ள, திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் தான், ஸ்ரீரங்கத்துக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள விமான நிலையம் ஆகும். இந்தியாவின் முக்கிய நகரங்களான பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் டெல்லிக்கு விமானங்கள் உள்ளன. சிங்கப்பூர், அபு தாபி, துபாய், குவைத் மற்றும் ஷார்ஜாவிலிருந்து சர்வதேச விமானங்கள் இங்கு வரை இயக்கப்படுகின்றன. விமான நிலையத்திலிருந்து ஒரு தனியார் காரை வாடகைக்கு எடுத்து, அதன் மூலம் இந்நகரை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Mar,Thu
Check Out
29 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri