Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஸ்ரீவில்லிபுத்தூர் » வானிலை

ஸ்ரீவில்லிபுத்தூர் வானிலை

நிச்சயமாக இளவேனிர்காலமே ஸ்ரீவில்லிப்புத்தூரின் சிறந்த காலம் ஆகும். அக்காலகட்டத்தில் பட்டணமே புதுப்பொழிவுடன் காணப்படுகின்றது. குளிர்க்காலத்திற்கு பிறகு, கோடக்காலத்திற்கு முன்பு இருப்பதால், இக்காலத்தை மகிழ்ந்து அனுபவிக்கலாம். இக்காலத்தில் சராசரி தட்பவெப்பம் 25 முதல் 28 டிகிரி செல்சியசாக இருக்கின்றது.

கோடைகாலம்

தமிழ் நாட்டின் மற்ற இடங்களை போலவே ஸ்ரீவில்லிப்புத்தூரிலும் கோடை வெப்பம் அதிகமாகவே இருக்கின்றது. ஆனால், மாலை நேரத்தில் வானிலை குளிர்ச்சி அடைகின்றது.மாலைப்பொழுதில் நதி அருகே அமர்ந்து அருமையான இளம் காற்றை அனுபவிப்பது ஒரு சுகமான அனுபவம். சராசரி தட்பவெப்பம் 35 முதல் 38 டிகிரி செல்சியசாக இருக்கிறது.

மழைக்காலம்

மழைக்காலத்தில் இங்கே அதிகமான மழைப்பொழிவு இருப்பதால், ஸ்ரீவில்லிப்புத்தூரின் வானிலை மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது. ஊராட்சி அதிகாரிகள் இங்கே நல்ல கழிவுநீர்வடிகால் அமைப்பு வைத்து இருப்பதால், நகரில் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்பதே இல்லை.

குளிர்காலம்

குளிர்க்காலத்தில் சராசரி தட்பவெப்பம் 15 முதல் 18 வரை இருக்கின்றது. இந்த காலமும் உள்ளூர்வாசிகளுக்கு மிகவும் இனிமையானதாக இருக்கின்றது. மதிய நேரத்தில் கதகதப்பான சூரிய ஒளியை அனுபவிப்பதால், இந்த காலமும் மிகவும் அருமையானதாக இருக்கின்றது. ஆனால், தெற்கு பகுதிகளில் இருக்கும் மற்ற ஊர்களை போல இது குளிர்ச்சியாக இருப்பது இல்லை.