Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சுல்தான் பத்தேரி » வானிலை

சுல்தான் பத்தேரி வானிலை

சுல்தான் பத்தேரி நகருக்கு மழைக் காலங்கள் முடிந்து, கோடை காலங்கள் ஆரம்பமாகும் காலத்துக்கு முன்பு, அக்டோபரிலிருந்து, பிப்ரவரி வரையிலான காலங்களில் சுற்றுலா வருவது மிகச் சிறந்த அனுபவமாக அமையும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : சுல்தான் பத்தேரி நகரின் கோடை காலங்களில் சூடான மற்றும் வறண்ட வானிலையே நிலவும். இந்தக் காலங்களில் சுல்தான் பத்தேரியில் அதிகபட்சமாக 34 டிகிரி அளவில் வெப்பநிலை பதிவாகும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : சுல்தான் பத்தேரி நகரின் மழைக் காலங்களில் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக கடுமையான மழைப் பொழிவு இருக்கும். அதோடு இந்தக் காலங்களில் கனமழையால் சாலைகள் வழுக்கும் நிலையில் காணப்படுவதால் மழைக் காலம் சுல்தான் பத்தேரி நகரை சுற்றிப் பார்க்க உகந்த காலம் அல்ல.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : சுல்தான் பத்தேரி நகரின் பனிக் காலங்களில் நிலவும் இதமான வெப்பநிலை நகரை சுற்றிப் பார்க்க மிகச் சிறந்ததாக இருக்கும். எனினும் சுற்றுலாப் பயணிகள் இந்தக் காலங்களில் சுல்தான் பத்தேரி நகருக்கு வரும் போது கம்பளி ஆடைகளை உடன் கொண்டுவருவது மிகவும் அவசியம்.