Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சூரத் » வானிலை

சூரத் வானிலை

சூரத் நகரத்திற்கு கனமழை பெய்யும் மழைக்காலங்களில் சுற்றுலா வர திட்டமிடுவது தவறான யோசனையாகும். கோடைக்காலங்கள் சற்றே நன்றாக இருக்கும். ஆனால், குளிர்காலத்தில் அதிக வெப்பமில்லாமல், மிகவும் மகிழ்ச்சிகரமான பருவநிலை சூரத் கொண்டிருக்கும்.

கோடைகாலம்

சூரத் நகரத்தில் மார்ச் முதல் ஜுன் வரையிலான மாதங்களில் நிலவும் கோடைக்கால வெப்பநிலை குறைந்தபட்சம் 21°C அல்லது 71°F முதல் அதிகபட்சமாக 40°C அல்லது 104°F வரையிலும் இருக்கும். இந்நகரத்தின் கோடைக்காலம் பெரும்பாலும் வறட்சியானதாகவே இருக்கும்.

மழைக்காலம்

ஜுன் மாதத்தின் முடிவில் தொடங்கும் மழைக்காலம் செப்டம்பர் மாதத்தின் இறுதி வரையிலும் நீடித்திருக்கும். இந்நாட்களில் வெப்பநிலை 19°C அல்லது 66°F முதல் 32°C அல்லது 90°F வரையிலும் இருக்கும். 1000 மிமீ அல்லது 30 அங்குல, கன மழையைப் பெறும் சூரத் நகரம் பெற்று வருகிறது. அந்நாட்களில் தாபி ஆற்றுப்படுகைகளில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடி, சில நேரங்களில் இந்நகரத்தை வெள்ளத்தால் பாதிக்கப்படவும் செய்கிறது.

குளிர்காலம்

மழை குறையத் தொடங்கும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்குப் பிறகு, டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான குளிர்காலத்தில் சூரத் நகரத்தின் வெப்பநிலை மிகவும் குளிர்ச்சியானதாகவும் மற்றும் குறைந்த அளவு மழையை கொண்டதாகவும் இருக்கும். இந்நாட்களில் வெப்பநிலை 6°C அல்லது 40°F முதல் 33°C அல்லது 90°F வரையிலும் இருக்கும்.