Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சூரியனார் கோவில் » வானிலை

சூரியனார் கோவில் வானிலை

சூரியனார் கோவிலையும் அதனை சுற்றி உள்ள ஏனைய நவக்கிரக திருத்தலங்களையும் தரிசிக்க அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலும் சிறந்த கால கட்டம் ஆகும். சூரியனார் கோவிலுக்கு குறும் பயணம் மேற்கொள்ள விரும்பும் பக்தர்கள் ஜூன் முதல் செப்டம்பர் வரை பயணிக்கலாம்.

கோடைகாலம்

சூரியனார் கோவில் உட்பட அனைத்து நவக்கிரக கோவில்களிலும் கோடையின் தாக்கம் அதிகமாக இருக்கும். இக்கடும் வெயில் காலத்தில் வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் முதல் 44டிகிரி செல்சியஸ் வரை நிலவும். இக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பக்தர்களும், பயணிகளும் பெரும்பாலும் கோடை காலத்தில் சூரியனார் கோவிலுக்கு வருவதில்லை.

மழைக்காலம்

ஜூனில் இருந்து செப்டம்பர் வரை இங்கு மழைக்காலம். இந்தக் காலங்களில் இங்கு குறைந்த அளவிலான மழைப் பொழிவே இருக்கும்.

குளிர்காலம்

குளிர்கால பிரியர்கள் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்காலத்தை அனுபவிக்க முடியும். இந்தக் காலங்களில் வெப்ப நிலை 20 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை நிலவும். சூரியனார் கோவிலின் வானிலை குளிர் காலத்தில் அருமையாக இருக்கும்.