Search
  • Follow NativePlanet
Share

சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்!

11

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு நகரம் சுவாமிமலை. நேரடியாக மொழிபெயர்த்தால், சுவாமிமலை என்பதற்கு கடவுளின் மலை என்று பொருள் படும். ஆனால் சுவாமிமலையின் பண்டைகாலப் பெயர் திருவேரகம் என்பதாகும்.

இவ்விடத்தினைச் சுற்றிலும் தெய்வ பிரசன்னம் இருப்பதை தெளிவாக உணர முடியும். தமிழ் கடவுளான முருகப் பெருமானின் ஆறு படைவீடுகளில் சுவாமிமலையும் ஒரு படைவீடாகும்.

மாநிலத்திலேயே வெண்கலக் காசுகள் செய்யக் கற்றுத்தரும் ஒரே பள்ளி இங்குதான் உள்ளது. இயற்கையாகவே வேளாண்மைப் பொருளாதாரத்தைச் சார்ந்துள்ள இந்நகரத்தில் உற்பத்தி செய்யப்படும் இரண்டு வேளாண்மைப் பொருள்கள் நெல்லும், கரும்புமாகும்.

வரலாற்றுப் பின்புலம்

காவிரியாற்றின் கிளையாறு ஒன்றின் கரையில் அமைந்துள்ள சுவாமிமலையானது முருகப் பெருமான் என்று அழைக்கப்படும் கார்த்திகேயக் கடவுளின் அறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாகக் கருதப்படுகிறது.

இத்தலத்தோடு தொடர்புடைய புராணங்களின்படி, முருகப் பெருமான் "ஓம்" என்னும் பிரணவ மந்திரத்தின் பொருளை தனது தந்தையான சிவபெருமானுக்கு உரைத்த தலம் சுவாமிமலையாகும்.

இக்கோவிலின் ராஜகோபுரத்தில் செதுக்கப்பட்டுள்ள சிலைகளில், மந்திரத்தின் பொருளை விளக்கும் முருகப்பெருமான் குருவாகவும், மந்திரப் பொருளை காதில் கேட்கும் சிவபெருமான் சீடனாகவும் செதுக்கப்பட்டுள்ளனர்.

இப்புராணக் கதையின் விளைவாகவே இவ்வூருக்கு சுவாமிமலை என்னும் பெயர் வந்தது. மேலும் இங்குள்ள முருகப் பெருமான் சுவாமிநாதன் என்று அழைக்கப்படுகிறார்.

திருவிழாக்கள்

கோவில்கள் நிறைந்த நகரமான கும்பகோணத்திற்கு வெகு அருகாமையில் அமைந்திருப்பதால், ஏராளமான பக்தர்களும் சுற்றுலாப்பயணிகளும் சுவாமிமலைக்கு வருகைபுரிகிறார்கள்.

ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் தேர்த்திருவிழா, மார்ச் மாதத்தில் நடைபெறும் பங்குனி உத்திரம் உள்ளிட்ட பிரபலமான திருவிழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. மே மாதத்தில் வைகாசி விசாகத்திருவிழாவும், அக்டோபர் மாதத்தில் கந்த சஷ்டித்திருவிழாவும் கொண்டாடப்படுகின்றன.

சுவாமிமலை சிறப்பு

சுவாமிமலை வானிலை

சிறந்த காலநிலை சுவாமிமலை

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சுவாமிமலை

  • சாலை வழியாக
    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் சுவாமிமலையை அனேகமாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகரங்களுடனும் இணைக்கின்றன. கும்பகோணம், திருச்சி, சிதம்பரம் மற்றும் சென்னை போன்ற நகரங்களிலிருந்து சீரான நேரங்களில் பேருந்து வசதிகள் சுவாமிமலைக்கு உள்ளன. இது ஒரு புகழ்பெற்ற ஆன்மீக சுற்றுலாத் தலமாகையால், இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்கள், நடத்தப்படும் பூஜைகளைப் பொறுத்து, இவ்வூருக்கு வரும் பேருந்துகளின் எண்ணிக்கை சீசனுக்கு சீசன் மாறுபடும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    சுவாமிமலைக்கு மிக அருகிலுள்ள இரயில் நிலையம் சுவாமிமலையிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. கொல்லம், திருப்பதி, சென்னை மற்றும் இராமேஸ்வரத்திலிருந்து இரயில்கள் அடிக்கடி கும்பகோணம் இரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றன. கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைக்கு வாடகைக்கார்களும் பேருந்துகளும் கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சுவாமிமலைக்கு மிக அருகிலுள்ள விமான நிலையம் 85 கிலோமீட்டர் தொலைவில் திருச்சியில் அமைந்துள்ளது. சுவாமிமலைக்கு மிக அருகிலுள்ள பன்னாட்டு விமான நிலையம் 264 கிலோமீட்டர் தொலைவில் சென்னையில் அமைந்துள்ளது. திருச்சியிலிருந்து சுவாமிமலைக்கு வாடகைக் கார்கள் ரூபாய் 1000க்கும் சென்னையிலிருந்து ரூபாய் 3000க்கும் கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
17 Apr,Wed
Return On
18 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
17 Apr,Wed
Check Out
18 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
17 Apr,Wed
Return On
18 Apr,Thu