Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தடியாண்டமோல் » வானிலை

தடியாண்டமோல் வானிலை

தடியாண்டமோல் நகருக்கு கோடை காலத்தில் சுற்றுலா வந்தால் நடைபயணம் போன்றவற்றில் ஈடுபடுவது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும்.

கோடைகாலம்

(மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை): கோடைக்காலத்தின் தடியாண்டமோல் பகுதியில் வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. பகலில் 350 C ஆகவும் இரவில் மிகக்குறைவாக 170 C என்ற அளவிலும் இக்காலத்தில் வெப்பநிலை நிலவுகிறது. கோடைக்காலம் மலையேற்றம் மற்று இன்னபிற வெளிப்புற சுற்றுலாவுக்கு உகந்ததாக இருக்கும் என்பதாக கருதப்படுகிறது.

மழைக்காலம்

(ஜூன் முதல் அக்டோபர் வரை): தடியாண்டமோல்  மலைஸ்தலம் மழைக்காலத்தில் தென்மேற்கு பருவமழையின் மூலமாக நல்ல கணிசமான மழையை பெறுகிறது. இப்பருவத்தில் வெளிப்புறச் சுற்றுலாவுக்கான வாய்ப்புகள் குறைவு. எனவே பயணிகள் மழைக்காலத்தில் இங்கு விஜயம் செய்வதை தவிர்க்கின்றனர்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை): குளிர்காலத்தில் தடியண்டமோல் மலைஸ்தலம் மிகக்குளிருடன் கூடிய சூழலைக் கொண்டுள்ளது. இக்காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 50 C ஆகவும் அதிகபட்ச வெப்பநிலையாக 120 C ஆகவும் உள்ளது.