டெஹ்ராடூனின் ஜாலி கிராண்ட் விமான நிலையம் டெஹ்ரியில் இருந்ய்து 85 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது டெஹ்ரிக்கு அருகில் உள்ள விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையம் அனைத்து முக்கிய இந்திய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்திற்கு புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அடிக்கடி விமானங்கள் இயக்கப் படுகின்றன. சுற்றுலா பயணிகள் டெஹ்ரியை அடைய ஜாலி கிராண்ட் விமான நிலையத்தில் இருந்து வண்டிகளை வாடகைக்கு அமர்த்தி கொள்ளலாம்.