Search
  • Follow NativePlanet
Share

தேஜ்பூர் - வரலாற்று வளமும், கலாச்சாரப் பெருமையும்!

19

பிரம்மபுத்திரா நதியின் வடக்கு கரையில் அமைந்துள்ள தேஜ்பூர் சோனித்பூர் மாவட்டத்தின் அழகிய தலைநகராகும். கலாச்சார மேன்மைக்காக புகழ்பெற்று விளங்கும் தேஜ்பூர் வரலாற்று வளமும், கல்வி நிலையங்களும் நிறைந்த இடமாக விளங்குகிறது. சமஸ்கிருத்தில் குருதியை குறிக்கும் வார்த்தையான 'தேஜ்' மற்றும் ஊரைக் குறிக்கும் 'புரா' என்ற வார்த்தையையும் இணைத்து இவ்வூர் தேஜ்பூர் என வழங்கப்படுகிறது.

பன்முகத்தன்மை கொண்ட தேஜ்பூர் சுற்றுலாத்துறை

புவியியல் அமைப்பின்படி இயற்கை வளம் நிறைந்த தேஜ்பூர் பல சமவெளிகளையும், மலை கோணங்களையும், பெரிய நதியையும் கொண்டு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது.

யாரையுமே மனம்மயக்கச் செய்யும் பிரம்மபுத்திர நதி மட்டுமல்லாது தனித்தன்மை வாய்ந்த 3015மீட்டர் நீளமுள்ள கொலியா பொமோரா பாலம் சோனித்பூர் மாவட்டத்தில் இருந்து நாகோன் மாவட்டம் வரை நீள்கிறது. அக்னிகார் தேஜ்பூரின் மிக முக்கிய சுற்றுலாதளமாக கருதப்படுகிறது. அதன் உச்சியில் இருந்து ஊரின் மொத்த அழகையும் காணலாம்.

தேஜ்பூரின் சுற்றுலா தலங்கள்

பைரவி கோவில், கோல் பூங்கா, கொலியா பொமொரா செடு, படும் புகுரி ஆகிய இடங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளன. அதுமட்டுமல்லாது சிவன் கோவில்களான கெடகேஷ்வர் கோவில், மஹாபைரவ் கோவில், ருத்ரபிரதா, நாக்‌ஷங்கர் கோவில் ஆகியவையும் சுற்றிப்பார்க்கும் வண்ணம் அமைந்துள்ளன.

புராண மற்றும் வரலாறுகளில் தேஜ்பூர்

கிருஷ்ணரின் பேரனான இளவரசர் அனிருத்திற்கும், பானசுரனின் மகளான உஷாவிற்குமிடையேயான காதல் நடைபெற்றது தேஜ்பூரில் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன அவர்கள் காதலைப் பற்றி அசுர அரசரான பானசுரருக்கு தெரியவந்தபின் அனிருத்தை சிறையில் அடைத்திருக்கிறார்.

இதை அறிந்து கோபம் கொண்ட கிருஷ்ணர் பானசுரர் மீது போர்தொடுத்து கடுமையாக போரிட்டதாக நம்பப்படுகிறது. அப்போரில் சிந்தப்பட்ட ரத்தத்தால் இவ்வூர் 'ரத்த நகரம்' என அர்த்தப்படும் வண்ணம் தேஜ்பூர் என பெயர் பெற்றதாக நம்பப்படுகிறது.

தற்கால தேஜ்பூர் 1835ல் ஆங்கிலேயர்கள் இவ்வூரை தரங் மாவட்டத்தில் தலைமைச் செயலகமாக ஆக்கியதில் இருந்து முக்கியத்துவம் பெற்றது. வியூகத்திற்கு ஏற்ற புவியியல் அமைப்பினாலும், அருணாச்சல பிரதேசத்திற்கு அருகில் உள்ளதாலும் இங்கு ராணுவ மற்றும் விமான தடவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள இரண்டு சுகோய் விமான தளவாடங்களில் ஒன்று தேஜ்பூரிலும் மற்றொன்று புனேவிலும் அமைந்துள்ளது.

தேஜ்பூர், அசாமின் கலாச்சார தலைநகரம்

கலாச்சார ரீதியாக பல பிரபலங்கள் தேஜ்பூருடன் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். அசாமின் முதல் திரைப்படக் கலைஞரான ஜோதி பிரசாத் அகர்வாலா, புரட்சிகரமான பாடகரான கலகுரு பிஷ்ணு பிரசாத் ரபா, புகழ்பெற்ற நடிகரான பானி ஷர்மா ஆகியோர் இங்கு பிறந்தவர்கள். இந்நகரம் அசாமின் கலாச்சார தலைநகராக அறியப்படுகிறது.

தேஜ்பூரை அடையும் வழிகள்

கொல்கட்டா மற்றும் சில்சாரில் இருந்து தேஜ்பூரின் சிறிய விமான நிலையத்திற்கு விமான சேவைகள் உள்ளன. ரங்கியா மற்றும் ரங்கபுரா ஆகிய பகுதிகளை இணைக்கும் ரயில் சேவையும் இங்கு உள்ளது. எனினும் அசாம் முழுவதையும் இணைக்கும் சாலைவழிபோக்குவரத்து மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

தேஜ்பூர் வானிலை

மழைக்காலங்களில் தேஜ்பூர் மிக அதிகமான அளவில் மழைப்பொழிவை எதிர்கொள்கிறது. மிகவும் சூடான கோடைகாலமும், மிதமான குளிருடன் கூடிய குளிர்காலமும் இங்கு நிலவுகிறது. கோடையின் போது 36டிகிரி வரை அதிகமாகும் வானிலை குளிர்காலங்களில் 7டிகிரி வரை சரிகிறது. இருக்கிறது.

தேஜ்பூர் சிறப்பு

தேஜ்பூர் வானிலை

சிறந்த காலநிலை தேஜ்பூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது தேஜ்பூர்

  • சாலை வழியாக
    தேஜ்பூரின் உயிர்நாடியாக சாலைவழி போக்குவரத்து இருக்கிறது. கெளஹாத்தியில் இருந்து மங்கள்டை தேசிய நெடுஞ்சாலை எண் 52 வழியாக (166கிமீ) மற்றும் உடல்பரி தேசியநெடுஞ்சாலை எண் 37 வழியாக (185கிமீ) என இரண்டு பாதைகள் தேஜ்பூர் செல்கின்றன. இரண்டு வழிகளிலுமே இரவு பகல் பேருந்து வசதிகள் உண்டு.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    இவ்வூருக்கான ரயில் தொடர்பு சரிவர அமைக்கப்படவில்லை. தேஜ்பூர் ரயில்கள் 24கிமீ தொலைவில் உள்ள ரங்கபுரா, 150கிமீ தொலஈல் உள்ள ரங்கியா ஆகிய இடங்களுக்கு மட்டுமே செல்கின்றன. எனவே இந்த அழகிய நகரை அடைய ரயில்வழி சிறந்த முறை அல்ல. எனவே பயணிகள் 166கிமீ தொலைவில் உள்ள கெளஹாத்தியில் இருந்து பேருந்து மூலம் தேஜ்பூர் செல்வதே சிறந்தது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    தேஜ்பூர் விமானநிலையத்தில் இருந்து கோல்கட்டா, சில்சார் ஆகிய ஊர்களுக்கு விமானசேவை இருந்தாலும் தேஜ்பூர் பயணிக்க சிறந்த வழியாக இது கருதப்படுவதில்லை. தேஜ்பூர் விமானநிலையம் இந்திய ராணுவத்தில் விமான தடவாளமாகவும் பயன்படுகிறது. நகரத்தின் மையப்பகுதியில் இருந்து 10கிமீ தொலைவில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
23 Apr,Tue
Return On
24 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
23 Apr,Tue
Check Out
24 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
23 Apr,Tue
Return On
24 Apr,Wed