Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தலச்சேரி » வானிலை

தலச்சேரி வானிலை

தலச்சேரி பகுதி கடுமையான கோடைக்காலம் மற்றும் மழைக்காலங்களை பெற்றுள்ளது. எனவே இவ்விரண்டு பருவங்களும் சுற்றுலாவுக்கு ஏற்றதாக இல்லை. மழைக்காலம் முடிந்த பின் வரும் குளிர்காலமே (அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை) இங்கு பயணம் மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது. இது தவிர தலச்சேரி நகரின் திருவிழாக் கொண்டாட்டங்களை ரசிக்க விரும்புபவர்கள் ஓணம் பண்டிகைக்காலத்தில் (ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை) இங்கு பயணம் மேற்கொள்ளலாம்.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் தலச்சேரி பகுதியில் அதிக வெப்பத்தின் தீவிரம் காணப்படுகிறது. இங்கு மார்ச் மாதத்தில் துவங்கும் கோடைக்காலமானது மே மாதம் வரை நீடிக்கிறது. இக்காலத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 40° C வரை நிலவுகிறது. எனவே தலசேரிக்கு கோடைக்காலத்தில் பயணம் மேற்கொள்வது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். அப்படியே சென்றாலும் மெல்லிய பருத்தி உடைகளுடன் பயணிப்பது நல்லது.

மழைக்காலம்

தலச்சேரி பகுதியில் மழைக்காலம் ஜுன் முதல் செப்டம்பர் மாதம் வரை நிலவுகிறது. கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால் இக்காலத்தில் தலச்சேரி கடுமையான மழையை பெறுகிறது. எனவே மழைக்காலத்தில் பயணிகள் தலசேரிக்கு விஜயம் செய்வது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும்.

குளிர்காலம்

குளிர்காலத்தில் தலச்சேரி பகுதி இனிமையான இதமான சூழலை பெறுகிறது. டிசம்பர் மாதத்தில் துவங்கி பிப்ரவரி மாதம் வரை குளிர்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் சராசரி வெப்பநிலை 20° C முதல் 32° C வரை காணப்படுகிறது. எனவே கோட்டைகள், நினைவுச்சின்னங்கள் காபித்தோட்டங்கள் போன்றவற்றுக்கு விஜயம் செய்ய இது மிகவும் உகந்த பருவமாக அறியப்படுகிறது.