Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தேன்மலா » வானிலை

தேன்மலா வானிலை

டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையுள்ள இடைப்பட்ட பருவமே தேன்மலாவுக்கு சுற்றுலா மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது. இதமான பருவநிலையும் குளுமையான சூழலும் வெளிப்பொழுதுபோக்கு அம்சங்களான மலையேற்றம், சைக்கிள் பயணம், படகுச்சவாரி மற்றும் பறவை வேடிக்கை போன்றவற்றில் ஈடுபட உகந்ததாக உள்ளது. ‘சூழலியல் சுற்றுலாத்திட்ட’ வளாகத்திற்கு விஜயம் செய்யவும் இக்காலமே ஏற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோடைகாலம்

தேன்மலா சுற்றுலாத்தலத்தில் மார்ச் மாதம் துவங்கும் கோடைக்காலம் மே மாதம் வரை நீடிக்கிறது. இக்காலத்தில் அதிகபட்சமாக 36° C வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 20° C யும் காணப்படுகிறது. பகலில் அதிக வெப்பமும் இரவில் குளிர்ச்சியும் இக்காலத்தில் நிலவுகிறது. கோடைக்காலத்தில் தேன்மலாவுக்கு விஜயம் செய்யும்போது மெலிய பருத்தி உடைகளுடன் செல்வது சிறந்தது.

மழைக்காலம்

மழைக்காலம் துவங்கும்போதே இப்பகுதியின் வெப்பம் மறையத்துவங்கி விடுகிறது. ஜூன் மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை இப்பகுதியில் மழைக்காலம் நீடிக்கின்றது. மிதமான வெப்பநிலை இப்பருவத்தில் காணப்படுகிறது. தென்மேற்குப் பருவமழையின் மூலம் மிகக்கடுமையான மழைப்பொழிவை தேன்மலா பெறுகிறது. எனவே தொடர்ந்த மழைப்பொழிவு சாலை வசதிகளை பெருமளவில் பாதிப்பதால் இக்காலத்தில் சுற்றுலா மேற்கொள்வதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

குளிர்காலம்

தேன்மலா சுற்றுலாத்தலத்தில் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை குளிர்காலம் நீடிக்கிறது. இனிமையான, இதமான குளுமை இக்காலத்தில் நிலவுகிறது. மலைப்பாங்கான இப்பகுதிக்கு விஜயம் செய்ய குளிர்காலம் மிகவும் ஏற்றதாகும். மேலும், குளிர்காலத்தில் திடீரென்று வெப்பநிலை இறங்குவதற்கு வாய்ப்புள்ளதால் குளிருக்கான விசேஷ உடைகளுடன் பயணிப்பது நல்லது.