Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருச்செந்தூர் » வானிலை

திருச்செந்தூர் வானிலை

திருச்செந்தூருக்கு வருடம் முழுவதுமே விரும்பும்போது பயணம் மேற்கொள்ளலாம். அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் சுற்றுலா ஸ்தலங்களைக் கண்டு களிக்கவும், புனித யாத்திரை மேற்கொள்ளவும் சிறந்தது. ஜூன் முதல் செப்டம்பர்  வரையிலான காலத்தில், பகல் நேரங்களில் அதிகப்படியான வெட்ப நிலை இருப்பதால், மாலை நேரங்கள் கோவில்களை காணவும் நகரை சுற்றிப் பார்ப்பதற்கும் உகந்தவை.

கோடைகாலம்

திருச்செந்தூரில் வருடம் முழுவதுமே மிதமான பருவநிலை நிலவுகிறது. மார்ச் முதல் மே வரை கோடைக்காலம்  நிலவுகிறது.  வெப்ப நிலை 25 செல்சியஸ் முதல் 39 செல்சியஸ் வரையான எல்லையில் இருக்கும். மாலை நேரங்கள் மிதமான வானிலையுடன் கோவில் செல்ல ஏற்றதாக இருக்கும்.

மழைக்காலம்

திருச்செந்தூரில் ஜூன் முதல் செப்டம்பர்  வரையிலான காலத்தில் மிதமான மழை பொழிவு இருக்கும். வெட்ப நிலை குறைந்து, சில நாட்கள் தங்கி செல்லவும்,கோவில்களில் வழிபாடு செய்யவும் ஏற்ற சமயம் இது.

குளிர்காலம்

டிசம்பர் முதல் பிப்ரவரி வரை திருச்செந்தூரில் குளிர்காலம் நிலவுகிறது. வெட்ப நிலை மிதமானதாக 21 செல்சியஸ் முதல் 34 செல்சியஸ் வரையான எல்லையில் இருக்கும். அதனால் இங்கு வந்து செல்லவும், சுற்றுலா ஸ்தலங்களைக் கண்டு களிக்கவும், புனித யாத்திரை மேற்கொள்ளவும் இது உகந்த காலம்.