Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருநாகேஸ்வரம் » வானிலை

திருநாகேஸ்வரம் வானிலை

கும்பகோணத்திற்கு செல்ல சிறந்த காலமாக கருதப்படுவது அக்டோபருக்கும் மார்ச்சுக்கும் இடைப்பட்ட நாட்களே. இக்காலத்தில்தான் இதமான வெப்பநிலை நிலவி, பயணம் மேற்கொள்ளவும், இடங்களை சுற்றிப்பார்க்கவும் களைப்பை ஏற்படுத்தாமல், வசதியாக இருக்கும். மேலும் பல பண்டிகைகளும், விழாக்களும் இக்காலத்தில்தான் கொண்டாடப்படுவதால்,அது சுற்றுலாப்பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் எப்பொழுதும் நினைவில் கொள்ளக்கூடிய அனுபவத்தை அளிக்கும்.  மேலும் ஜூன் முதல் செப்டம்பர் வரையான காலமும் திருநாகேஸ்வரத்திற்கு சுற்றுலா செல்ல உகந்த காலமாகும்.

கோடைகாலம்

மற்ற நவக்கிரக தலங்களை போலவே திருநாகேஸ்வரத்திலும் கோடைக்காலமானது மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நீடிக்கிறது. கோடைகாலத்தில் காலநிலை மிக வெப்பமாகவும் ஈரப்பதத்துடனும் உள்ளது. கோடையில் சில நேரங்களில் மிக வறட்சியும் நிலவும். வெப்பநிலையானது 28℃ முதல் 44℃ வரை இருக்கும். இக்காலத்தில் திருநாகேஸ்வரத்திற்கு செல்வது உசிதமல்ல.

மழைக்காலம்

ஜூன் மாத மத்தியில் தொடங்கும் மழைக்காலம் செப்டம்பர் இறுதி வரை நீடிக்கிறது. மற்ற நவக்கிரக தலங்களை போல அல்லாமல் மழைக்காலத்தில் திருநாகேஸ்வரத்தில் மிதமான மழை முதல் மிக அதிகமான மழை வரை பெய்கிறது.(220 சென்டி மீட்டர் வரை) வெப்பநிலை நன்கு குறைந்து இதமான காலநிலை நிலவுகிறது. எனினும் மழைப் பொழிவினால் வெளியில் எங்கும் சென்று இடங்களைக் காண்பது கடினமானதாகிறது.

குளிர்காலம்

டிசம்பர் முதல் பிப்ரவரி வரையான காலம் இங்கு குளிர்காலமாகும். எனினும், தென்னிந்தியாவிலுள்ள பிற முக்கிய நகரங்களை போலவே திருநாகேஸ்வரத்திலும், குளிர்காலம் மிகக் குளிராக இருப்பதில்லை. இங்கு குளிர்காலம் இதமான மற்றும் மிதமான குளிருடன் நீடிக்கிறது. வெப்பநிலையானது 20℃-30℃ வரை நிலையாக உள்ளது.