Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருவானைகாவல் » வானிலை

திருவானைகாவல் வானிலை

திருவானைகாவலை சுற்றி பார்பதற்கு சரியான சமயம் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை உள்ள நாட்களாகும். அப்போது வெப்ப நிலை சற்று பொறுத்து கொள்ள கூடிய அளவிலும் கால நிலை இதமாகவும் காணப்படும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : திருவானைகாவலின் கோடை காலத்தில் வெப்பநிலை  37 டிகிரி செல்சியஸ் வரை உயர்கிறது மற்றும் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. மாலை நேரம்  மட்டுமே மதிய நேரத்தை ஒப்பிடுகையில் காற்று வீசினால் மட்டுமே குளிர்ச்சியாக இருக்கும்.  எனவே கோடைகாலம் திருவானைகாவலை சுற்றி பார்க்க சிறந்த காலம் இல்லை.

மழைக்காலம்

(மே முதல் செப்டம்பர் வரை) : திருவானைகாவலின் மழைக் காலங்களில் வெப்ப நிலை 25 டிகிரி செல்சியஸ்க்கும் குறைவாக காணப்படும். ஆனால் ஈரப்பதத்தின் அளவு சற்று அதிகமாக இருக்கும். இப்பகுது மிதமான மழையை பெறுகிறது ஆனால் காற்று வீசுவதை பொறுத்து இதன் அளவு மாறக்கூடும். மழைக்காலத்தில் இங்கு செல்வதை சுற்றுலா பயணிகள் தவிர்ப்பது நல்லது.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : திருவானைகாவலின் குளிர் காலங்களில் வெப்ப நிலை 22 டிகிரி செல்சியஸ் அளவாக குறைகிறது. சூரியன் சற்று வெப்பமாக இல்லாமல் கதகதப்பாக இருப்பதால்  மதிய நேரம் இனிமையாக இருக்கும். மாலை நேரத்திலும் இரவிலும் சற்று குளுமையாக இருக்கும்.