Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருவனந்தபுரம் » வானிலை

திருவனந்தபுரம் வானிலை

அக்டோபர் துவங்கி பிப்ரவரி மாதம் வரையிலான இடைப்பட்ட காலமே திருவனந்தபுரம் பகுதிக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. இனிமையான இதமான சூழ்நிலையுடன் காணப்படுவதால் இப்பருவம் வெளியில் இயற்கை காட்சிகளை சுற்றிப்பார்த்து ரசிக்கவும் பொழுதுபோக்குகளுக்கும் ஏற்றதாக உள்ளது.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் திருவனந்தபுரம் பகுதியில் அதிக வெப்பமும் ஈரப்பதமும் காணப்படுகிறது. இதனால் வெளியில் சுற்றிப்பார்ப்பது அசௌகரியமான ஒன்றாக இருக்கும். மார்ச் மாதத்தில் துவங்கும் கோடைக்காலமானது இங்கு மே மாதம் வரை நீடிக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 37° C வரை நிலவுகிறது.

மழைக்காலம்

ஜுன் முதல் செப்டம்பர் மாதம் வரை திருவனந்தபுரம் பகுதியில் மழைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் கடுமையான மழையை திருவனந்தபுரம் நகரம் பெறுகிறது. வெப்பநிலையும் அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் மிதமாக உள்ளது. எனவே இக்காலத்தில் திருவனந்தபுரத்திற்கு சுற்றுலா மேற்கொள்ளலாம். மேலும், இது ஓணம் கொண்டாட்டங்கள் நடைபெறும் காலம் என்பதால் நகரம் ஜொலிப்புடன் காட்சியளிப்பது இன்னும் கூடுதல் விசேஷம்.

குளிர்காலம்

நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை திருவனந்தபுரத்தில் குளிர்காலம் நீடிக்கிறது. இனிமையான இதமான சூழல் நிலவும் இக்காலத்தில் சராசரி வெப்பநிலை 30° C யை தாண்டுவதில்லை. எனவே திருவனந்தபுரத்திற்கு விஜயம் செய்ய இது மிகவும் உகந்த பருவமாக அறியப்படுகிறது.