Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருவெண்காடு » வானிலை

திருவெண்காடு வானிலை

பக்தர்கள் திருவெண்காட்டுக்கு வருவதற்கு, அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் உகந்ததாகும். இக்காலகட்டத்தில், பக்தர்கள் இங்குள்ள பல புனித திருக்கோயில்களுக்கு சென்று மகிழலாம். திருவெண்காட்டில், சிறிது நாட்கள் தங்கி வர விரும்புவோர் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் சென்று வரலாம். இந்த மாதங்களில் சிறிது வெப்பமாக இருந்தாலும், இடங்களைப் பார்த்து மகிழக்கூடிய வகையிலேயே வானிலை இருக்கும்.  

கோடைகாலம்

இங்கு மார்ச் முதல் மே மாதம் வரை கோடைகாலமாகும். அப்போது வளிமண்டல வெப்பம் 28 டிகிரி செல்சியஸ் முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இச்சமயத்தில், வானிலை வெப்பமாகவே இருக்குமாதலால், பக்தர்களின் வருகை மிகக் குறைவாகவே இருக்கும்.

மழைக்காலம்

ஜூன் முதல் செப்டம்பர் வரை திருவெண்காட்டில் மிதமான மழை பெய்யும். பெரும் மழை பெய்யாவிட்டாலும், கடுங்கோடையிலிருந்து மக்கள் சற்று இளைப்பாறும் விதமாக இக்காலம் விளங்கும்.

குளிர்காலம்

திருவெண்காட்டில், குளிர்காலம் டிசம்பர் மாதம் ஆரம்பித்து பிப்ரவரி மாதக் கடைசி வரை நீடிக்கும். குளிர்காலம் பொதுவாக 20 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை மிதமான தட்பவெப்ப நிலையில், மிக ரம்மியமாக இருக்கும்.