Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» திருவெண்காடு

திருவெண்காடு –  புதனுக்கான நவக்கிரக கோயில்!

6

திருவெண்காடு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி-பூம்புகார் சாலைக்கு தென்கிழக்கில், சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு தவம் செய்த இந்திரனின் வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் பெயரில் இருந்தே இத்தலத்தின் பெயர் இவ்வாறு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இது தென்னிந்தியாவின் ஒன்பது நவக்கிரக கோயில்களுள் ஒன்றாகும்.

திருவெண்காடு,காசிக்கு நிகராகக் கருதப்படும் ஆறு திருத்தலங்களுள் ஒன்று. இங்கு, புனித நீர், உறைவிட தெய்வம் மற்றும் ஸ்தல விருட்சம் ஆகிய அனைத்தும், எண்ணிக்கையில் மூன்றாகவே உள்ளன.

திருவெண்காடு, ஒன்பது கிரகங்களுள் ஒன்றான புதன் கிரகத்துக்கு உரியது. இத்தலம், ஐம்பத்தியோரு சக்தி பீடங்களுள் ஒன்று. இங்கு சிவபெருமானின் 64 மூர்த்தங்களையும், அகோரமூர்த்தி வடிவத்தையும் காணலாம். இங்கு தான் சிவபெருமான் தன் ஆறு விதமான தாண்டவங்களை நிகழ்த்தியதாக கருதப்படுகிறது. இது “ஆதி சிதம்பரம்” என்றும் அழைக்கப்படுகிறது.

திருவெண்காட்டின் வரலாறு

முருதுவன் என்னும் அசுரன் சிவபெருமானிடம் இருந்து நிறைய வரங்களைப் பெற்று, அவற்றைக் கொண்டு, தேவர்களை பலவாறாக துன்புறுத்தி வந்தான். அவனிடமிருந்து தம்மை காத்தருளுமாறு, தேவர்கள் சிவபெருமானை வேண்டினர்.

சிவபெருமான், தேவர்களை திருவெண்காட்டுக்குச் சென்று மறைவாக இருக்கும்படி அறிவுறுத்தி விட்டு, தன் வாகனமாகிய நந்தியை அவ்வசுரனை அழிப்பதற்கு அனுப்பினார். நந்தியும், அவ்வசுரனை தோற்கடித்து, பின் அவனை கடலுக்குள் தூக்கி எறிந்தது.

அதன் பின், அந்த அசுரன் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து, அதன் பலனாக, அவரது சூலாயுதத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டான். சூலாயுதத்தோடு திரும்பிய அசுரன், பெரும் பலத்தோடு தேவர்களை தாக்கத் துவங்கினான். மீண்டும் தேவர்கள் சிவனை நாடி, தங்களை காக்கும்படி வேண்டினர். இம்முறையும், சிவன் நந்தியை அனுப்பி வைத்தார்.

ஆனால், இம்முறை அசுரனிடம் சிவபெருமான் அளித்த சூலாயுதம் இருந்ததனால், நந்தியால் அவனை தோற்கடிக்க முடியவில்லை. அவன் அந்த சூலாயுதத்தைக் கொண்டு நந்தியை படுகாயமுறச் செய்தான்.

அவ்வாறு பெற்ற விழுப்புண்களை இக்கோயிலில் உள்ள நந்தி சிலையில் இன்றும் காணலாம். நந்தி காயமுற்றதைக் கண்ட சிவன், பெருங்கோபமுற்று, தன் மூன்றாவது கண்ணாகிய நெற்றிக் கண்ணைத் திறந்து, அவ்வசுரனை வதம் செய்தார்.

அகோரமூர்த்தி வடிவில் உள்ள சிவனின் சிலை, அவரது இப்பெருங்கோபத்தினை நன்கு வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த அகோரமூர்த்தி வடிவில் உள்ள சிவனை வழிபடுவோருக்கு எப்போதும் எதிரிகளே இருக்கமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.   

திருவெண்காடு மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலா தளங்கள்

ஒன்பது நவக்கிரக ஸ்தலமான திருநாகேஸ்வரத்துக்கு அருகிலேயே மற்ற எட்டு நவக்கிரக ஸ்தலங்களும் அமையப்பெற்றுள்ளன. சனி பகவான் கோயில் உள்ள திருநள்ளாறு, சுக்ரபகவான் கோயில் உள்ள கஞ்சனூர், சூரிய பகவானுக்குரிய சூரியனார் கோயில், ராகுவுக்கு கோயில் உள்ள திருநாகேஸ்வரம், சந்திரனுக்கு கோயில் உள்ள திங்களூர், கேதுவுக்கு கோயில் உள்ள கீழ்பெரும்பள்ளம் ஆகிய ஊர்கள் திருவெண்காடுக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளன.

திருவெண்காட்டின் வானிலை

இங்கு வெப்ப வானிலையே நிலவுகிறது. இங்கு செல்வதற்கு உகந்த காலகட்டம், அக்டோபர் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை ஆகும்.

திருவெண்காட்டை அடைவது எப்படி?

திருவெண்காட்டை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, சென்னை, கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஊர்களில் இருந்து வான்வழியாகவோ, இரயில் மூலமாகவோ அல்லது சாலை வழியாகவோ எளிதில் அடையலாம்.

திருவெண்காடு சிறப்பு

திருவெண்காடு வானிலை

சிறந்த காலநிலை திருவெண்காடு

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது திருவெண்காடு

  • சாலை வழியாக
    திருவெண்காடு, தஞ்சாவூருக்கு அருகாமையில் உள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து பேருந்துகள், திருவெண்காடு மற்றும் தஞ்சாவூரிலிருந்து பல ஊர்களுக்கு இயங்குகின்றன. பயணிகள் மதுரை மற்றும் திருச்சியிலிருந்தும் பேருந்து சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இது மட்டுமின்றி பல தனியார் பேருந்துகளும் இயங்குகின்றன. இவ்வூர், மதுரை, திருவனந்தபுரம், சென்னை, கன்னியாகுமரி மற்றும் பெங்களூரு ஆகிய ஊர்களில் இருந்து எளிதாக செல்லும்படி அமைந்துள்ளது. பயணிகள் திருச்சி விமான நிலையத்திலிருந்து டாக்ஸி மூலமாகவும் இவ்வூரை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    திருச்சி ரயில் நிலையம் தஞ்சாவூரிலிருந்து 58 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து மதுரைக்கும், சென்னைக்கும் ஏராளமான ரயில்கள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    திருவெண்காடு, தஞ்சாவூர் மாவட்டத்தின் தென்திசையில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் தஞ்சாவூருக்கு அருகாமையிலேயே உள்ளது. தஞ்சாவூரிலிருந்து 58 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி சர்வதேச விமான நிலையம் தான் மிக அருகில் அமைந்த விமான நிலையமாகும். திருச்சியிலிருந்து சென்னை செல்ல வழக்கமான விமானங்கள் பல உள்ளன. பெங்களூரு மற்றும் சென்னை விமான நிலையங்களும் எளிதில் செல்லக்கூடிய தொலைவிலேயே அமைந்துள்ளன. இவ்விரு விமான நிலையங்களிலிருந்தும், இந்தியாவின் பெரும்பாலான நகரங்களுக்கும், உலகின் மற்ற பல பகுதிகளுக்கும் ஏராளமான விமான சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Wed
Check Out
25 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu