Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருநெல்வேலி » வானிலை

திருநெல்வேலி வானிலை

மழைக்காலத்தை தொடர்ந்து வரும் அக்டோபர் முதல் பிப்ரவரி வரையான நாட்களில் வெப்பநிலை கணிசமாக குறைந்து, குறைந்தபட்சமாக 26 டிகிரியும் அதிகபட்சமாக 33 டிகிரியும் நிலவுகிறது. இக்காலமே திருநெல்வேலியைச் சுற்றிப் பார்ப்பதற்கு உகந்த காலமாகும். எனினும் எந்நேரத்தில் திருநெல்வேலிக்குச் செல்வதானாலும், ஒருவர், பருத்தி ஆடைகளை உடன் கொண்டு செல்வது சிறந்தது.

கோடைகாலம்

திருநெல்வேலியின் கோடைகாலமானது மிக உயர்ந்த வெப்பநிலையுடன் கூடியதாகும். இந்தக் காலங்களில் வெப்பநிலை 39 டிகிரி வரை உயரும். சராசரியாக இக்கோடைகாலத்தில் வெப்பநிலை 34 முதல் 39 டிகிரி வரை இருப்பதனால், இந்தக் காலங்களில் இங்கு வருவோர் பருத்தி ஆடைகளை உடன் கொண்டு செல்வது நல்லது. இருந்தாலும் கோடைகாலத்தில் திருநெல்வேலிக்கு செல்லாதிருப்பது இன்னும் புத்திசாலித்தனமாகும். மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் இங்கு கோடைக்காலமாகும்.

மழைக்காலம்

திருநெல்வேலியில் மழைக்காலமானது, ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கி, அக்டோபர் வரை நீடிக்ககின்றது. மழைப்பொழிவினால், வெப்பநிலையானது கணிசமான அளவு குறைந்து காணப்படுகிறது. எனினும் அவ்வப்பொழுது மழை பெய்து சுற்றுலாப் பயணிகளின் உற்சாகத்தைக் கெடுத்துவிடுவதால், இதுவும் திருநெல்வேலிக்கு சுற்றுலா செல்ல உகந்த காலம் அல்ல.

குளிர்காலம்

திருநெல்வேலியில் குளிர்காலம் என்று குறிப்பிடும்படியாக எதுவுமில்லை. எனினும், மழைக்காலத்தை தொடர்ந்து வரும் நாட்களில் வெப்பநிலை கணிசமாகக் குறைந்து, திருநெல்வேலியைச் சுற்றிப் பார்ப்பதற்கு உகந்த காலமாகின்றன. இக்காலம் அக்டோபர் முதல் மார்ச் வரை நீடிக்கிறது.