Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருப்பதி » வானிலை

திருப்பதி வானிலை

மழைக்கால இறுதி தொடங்கி குளிர்காலம் முழுமையையும் உள்ளடக்கிய பருவமே திருப்பதிக்கு சுற்றுலா மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது. அதாவது, நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் திருப்பதி சுற்றுலாவுக்கு மிகவும் உகந்ததாக காணப்படுகின்றன. இருப்பினும் ஜுன் முதல் செப்டம்பர் மாதம் வரையுள்ள நாட்களும் திருப்பதி செல்வதற்கு ஏற்றதாக கருதப்படுகின்றன. இந்நாட்களில்தான் பிரம்மோத்சவம் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் திருப்பதிக்கு சுற்றுலா மேற்கொள்வது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். இக்காலத்தில் மிகக் கடுமையான வெப்பநிலை நிலவுகிறது. குறிப்பாக ஏப்ரல் மே மாதத்தில் அதிகபட்சமாக 45° C முதல் 47° C வரை கூட வெப்பநிலை உயரக்கூடும்.

மழைக்காலம்

ஜூலை மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை திருப்பதியில் மழைக்காலம் நிலவுகிறது. இருப்பினும் அக்டோபர், நவம்பர் மாதத்தில் கூட மழைப்பொழிவு இருக்கக்கூடும். மழைக்காலம் நகரின் வெப்பநிலையை குறைத்து இதமான பசுமையான சூழலை திருப்பதிக்கு வழங்குகிறது.

குளிர்காலம்

டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கும் குளிர்காலமே திருப்பதிக்கு விஜயம் செய்ய உகந்ததாக உள்ளது. இக்காலத்தில் சராசரியாக வெப்பநிலை15° C முதல் 30° C வரை காணப்படுகிறது. குளிர்காலத்தின் இனிமையான மற்றும் இதமான சூழல் பயணிகளுக்கு அற்புதமான சுற்றுலா அனுபவத்தினை தருகிறது.