திருப்பூர் நகரம் ஆண்டு முழுவதும் சீரான வெப்பநிலையை கொண்டிருப்பதால் வருடத்தில் எந்த பருவத்திலும் இந்நகரத்துக்கு சுற்றுலா வரலாம்.
திருப்பூரின் கோடைகாலமான மார்ச், ஏப்ரல் மே, மாதங்களில் குறைந்த வெப்பநிலையாக 29℃ மற்றும் அதிக அளவாக 35 ℃ ம் வெப்பநிலை பதிவாகும். தமிழ்நாட்டின் இதர இடங்களைவிட திருப்பூரில் கோடைக்கால வெப்பநிலை குறைந்தே காணப்படுவதால், வருடத்தின் அனைத்து மாதங்களிலும் இங்கு சுற்றுலா மேற்கொள்ளலாம்.
ஜூன் ,ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் இலேசான மழைச் சாரலுடன் குறைந்த அளவு வெப்பநிலை காணப்படுகிறது. இக்காலமும் திருப்பூருக்கு சுற்றுலா செல்வதற்கான சிறந்த காலமாகக் கருதப்படுகிறது.
செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் திருப்பூர் நகரின் குளிர்காலமாகும். இக்காலத்தில் அதிக அளவாக 29 டிகிரியாகவும் குறைந்த அளவாக 24 டிகிரியாகவும் வெப்பநிலை நிலவுகிறது.