Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தோரண்மால் » வானிலை

தோரண்மால் வானிலை

வெப்பமான கோடைக்காலத்தை கொண்டிருந்தாலும் மலைவாசஸ்தலம் என்பதால் தோரண்மால் வருடமுழுதும் ஆரோக்கியமான சீதோஷ்ணநிலையைக் கொண்டிருக்கிறது. இந்த சுற்றுலாத்தலத்தை மழைக்கு பிந்தைய காலத்தில் விஜயம் செய்வது சிறந்தது. இக்காலத்தில்  இங்குள்ள நீர்வீழ்ச்சிகள் நிரம்பி வழிவதுடன் சுற்றுப்புறமும் புதிய பசுமையுடன் காட்சியளிக்கின்றது. 

கோடைகாலம்

தோரண்மால் பகுதியில் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கோடைக்காலம் நிலவுகிறது. அதிக வெப்பத்துடன் காணப்படும் இக்காலத்தில் வெப்பநிலை 22°C  முதல் அதிகபட்சமாக 40°C  வரை இருக்கும். குளுமையான காற்று வீசினாலும்கூட வெப்பம் அதிகாகவே உள்ளது.  எனவே பொதுவாக பயணிகள் கோடைக்காலத்தை தவிர்க்கின்றனர்.

மழைக்காலம்

கோடையின் வெப்பத்துக்குப்பிறகு வரும் மழைக்காலம் தோரண்மால் பகுதியில்  இரு கரம் கொண்டு வரவேற்கப்படுகிறது. ஜுலை முதல் செப்டம்பர் வரை நிலவும் மழைக்காலத்தில் கணிசமான மழைப்பொழிவினை இப்பிரதேசம் பெறுகிறது. வெப்பநிலையும் குறைகிறது.

குளிர்காலம்

தோரண்மால் பகுதியில் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இனிமையான குளிர்காலம் நிலவுகிறது. இக்குளிர்காலத்தில் மிகக் குறைந்தபட்ச வெப்பநிலையாக  12°C  ஆகவும் அதிகபட்சமாக      33°C க்கு மேல் உயராமலும் காணப்படுகிறது. இக்காலத்தில் பயணிகல் குளிர்காலத்துக்கான பிரத்யேக ஆடைகளுடன் பயணம் மேற்கொள்வது அவசியமாகும்.