Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தரங்கம்பாடி » வானிலை

தரங்கம்பாடி வானிலை

தரங்கம்பாடியில் நிலவி வரும் பருவநிலைகளைக் கணக்கில் கொண்டால், அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையிலான குளிர்காலம் தான் சுற்றுலாப் பயணம் வருவதற்கு சிறந்த சீசனாகும். எனினும், வருடத்தின் எந்த பருவத்தில் தரங்கம்பாடிக்கு சுற்றுலாப் பயணம் செய்தாலும் மெல்லிய பருத்தி ஆடைகளை எடுத்துச் செல்வது தகுந்த முன்னேற்பாடாக இருக்கும்.

கோடைகாலம்

தரங்கம்பாடியில் வெப்பம் மற்றும் அனலான பருவநிலையே ஆண்டின் பெரும்பாலன காலங்களில் நிலவி வருகிறது. இதன் கோடைகாலங்கள் மார்ச் முதல் ஜுன் மாதங்களில் நிலவி வருகிறது. இந்த நாட்களில் 29 டிகிரி முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் வெப்பநிலை பகல் நேரங்களில் தாங்க முடியாததாகவே இருக்கும். எனவே கோடைக்காலத்தில் தரங்கம்பாடிக்கு சுற்றுலா செல்வதை தவிர்ப்பது நலம்.

மழைக்காலம்

தரங்கம்பாடியின் மழைக்காலங்கள் பெருமளவில் மழைப்பொழிவை கொண்டதாக அமைந்துள்ளது. பொதுவாகவே ஜுலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தரங்கம்பாடியில் மழைக்காலம் நிலவுகிறது. அதிகப்படியான மழைப்பொழிவின் காரணமாக இந்த காலத்தில் வெப்பநிலையின் அளவும் குறைந்தே காணப்படும்.

குளிர்காலம்

அக்டோபர் மாதத்தில் தொடங்கும் குளிர்காலம் மார்ச் மாதம் வரையிலும் தரங்கம்பாடியில் நீடித்திருக்கும். இந்த காலகட்டங்களில் வெப்பநிலையானது 25 டிகிரி முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். எனவே, குளிர்காலம் தான் தரங்கம்பாடிக்கு சுற்றுலா பயணம் வருவதற்கு சிறந்த பருவமாகும். கவி பாடும் கடற்கரையில் ஜில்லென்ற காற்று மற்றும் பருவ நிலையை அனுபவிப்பதை விட சிறந்த அனுபவம் சுற்றுலாப் பயணிகளுக்கு தரங்கம்பாடியைத் தவிர வேறெங்கும் கிடைக்காது.