Search
  • Follow NativePlanet
Share
» »நடிகை தமன்னாவின் கனவு தேசத்தில் உங்களுக்கு இடமிருக்கா?

நடிகை தமன்னாவின் கனவு தேசத்தில் உங்களுக்கு இடமிருக்கா?

இது கிழக்கு வெனிஸ் என்று அழைக்கப்படுகிறது.

நடிகை தமன்னாகிட்ட போயி நீங்க எங்க வாழணும்னு ஆசப்படுறீங்கன்னு கேட்டா அதுக்கு அவங்க சொர்க்கம் போன்ற காஷ்மீர்னு சொல்லுவாங்கலாம்.

தமன்னாவுக்கு காஷ்மீர்னா அவ்வளவு பிடிக்கும்னு பல பேட்டிகள்ல சொல்லிருக்காங்க. அப்படி அங்க என்னதான் இருக்குனு கொஞ்சம் நாமளும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

பூலோக சொர்க்கம்' மற்றும் 'கிழக்கின் வெனிஸ்' என்ற பெயர்களால் அழைக்கப்படும் ஸ்ரீநகர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அழகிய நகரமாகும். ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ள இந்நகரம் அழகிய ஏரிகள், படகு வீடுகள் மற்றும் கண்கவரும் வகையில் அமைந்துள்ள எண்ணற்ற முகலாய தோட்டங்கள் ஆகியவைகளுக்காக மிகவும் புகழ் பெற்ற நகரமாகும். ஸ்ரீ நகர் என்ற பெயர் வளத்தைக் குறிக்கும் 'ஸ்ரீ' மற்றும் இடத்தைக் குறிக்கும் 'நகர்' என்ற இரு சமஸ்கிருத வார்த்தைகளிலிருந்து வந்ததாகும். எனவே, இந்நகரத்தின் பெயருக்கு 'வளமான நகரம்' என்று பொருள் கொள்ளலாம்.

மிதக்கும் காய்கறி சந்தை

மிதக்கும் காய்கறி சந்தை

அழகிய நகரமாக மட்டுமல்லாமல் வரலாற்றுச் சிறப்பு, மத முக்கியத்துவம் மற்றும் தொல்பொருள் சின்னங்கள் என பல்வகை அம்சங்களை ஸ்ரீ நகர் கொண்டிருக்கிறது.

இங்கிருக்கும் சில வரலாற்று தொடர்புடைய கட்டிடங்கள் மற்றும் மதத் தலங்கள் இந்நகரத்தின் வளமையான மற்றும் பெருமையான பழமையை நிரூபிக்கக் நின்றிருக்கும் இன்றைய ஆதாரங்களாகும்

PC: nevil zaveri

அழகிய நீரூற்று

அழகிய நீரூற்று


கிமு.1500-க்கும் கிமு.3000-க்கும் இடைப்பட்ட புதிய கற்கால மனிதர்களின் குடியிருப்பு பகுதியான பர்ஸாகோம் ஸ்ரீ நகரில் உள்ள ஒரு முக்கியமான வரலாற்றுத் தலமாகும்.

இங்கு தோண்டியெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் ஸ்ரீ நகரிலுள்ள ஸ்ரீ பிரதாப் சிங் (SPS) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மியூசியத்தில் புதிய கற்கால மற்றும் பெரிய கற்காலத்தைச் சேர்ந்த விலங்குகளின் எலும்புக் கூடுகள், அம்புகள், கருவிகள் மற்றும் பானைகள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன

PC: Basharat Alam Shah

படகு பயணம்

படகு பயணம்


ஸ்ரீ நகரில் காணப்படும் சில மசூதிகளும், கோவில்களும் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவையாகும். சுங்கராச்சார்யா கோவில் மற்றும் ஜியேஸ்தேஸ்வரா கோவில் ஆகியவை இந்த நகரத்தின் மிகப் பிரபலமான கோவில்களாகும்.

ஜாமா மசூதி, ஹஸ்ரத்பல் மசூதி மற்றும் அகுந்த் முல்லா மசூதி ஆகியவை பரவலாக அறியப்பட்ட மற்றும் முதன்மையான சுற்றலா தலங்களாகும்.

PC: Basharat Alam Shah

பூக்களுடன் குழந்தைகள்

பூக்களுடன் குழந்தைகள்

உலகம் முழுவதுமிருந்து பெருமளவு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் முகலாய தோட்டங்களான நிஷாத் பூங்கா, ஷாலிமார் பூங்கா, அச்சாபல் பூங்கா, சஸ்மா சாஹி மற்றும் பாரி மஹால் ஆகியவையும் இந்நகரத்தில் இருக்கின்றன. இந்நகரத்தின் இயற்கை எழிலுக்கு மெருகூட்டுவதாக இந்த முகல் தோட்டங்கள் விளங்குகின்றன.

Pc: Partha S. Sahana

 ஸ்ரீநகரின் அழகிய காட்சிகள்

ஸ்ரீநகரின் அழகிய காட்சிகள்

ஸ்ரீ நகரில் இருக்கும் தால் ஏரி, நகீன் ஏரி, அச்சார் ஏரி மற்றும் மனஸ்பால் ஏரி ஆகியவை இந்நகரத்திலிருக்கும் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களாகும். இணையில்லாத இயற்கையழகும், அழகான சுற்றுச்சூழலும் இந்த ஏரிகளை சுற்றுலாப் பயணிகள் வந்து குவியும் இடங்களாக மாற்றுகின்றன.

Pc: BOMBMAN

மலைக்குன்றுகள்

மலைக்குன்றுகள்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 2-வது பெரிய ஏரியான தால் ஏரி, 'காஷ்மீரின் கிரீடத்தில் உள்ள ஆபரணம்' என்று அழைக்கப்படுகிறது. அழகிய இமயமலையின் பின்புலத்தில் இந்த ஏரி அமைந்துள்ளது.

ஸ்ரீ நகரின் ஏரிகள் அங்கிருக்கும் படகு வீடுகள் மற்றும் 'சிக்காரா' அல்லது மரப் படகு சவாரிகளுக்காக மிகவும் புகழ் பெற்ற நகரமாகும். சிக்காரா படகுகளில் சவாரி செய்து கொண்டே சுற்றுலாப் பயணிகள் சுற்றுச் சூழலை கவலையின்றி ரசித்திட முடியும்.

PC: Basharat Alam Shah

பூந்தோட்டம்

பூந்தோட்டம்

இந்நகரம் ட்ரெக்கிங் மற்றும் ஹைக்கிங் போன்ற சாகச விளையாட்டுக்களையும் அளிக்கவல்ல சுற்றுலாதலமாகும். ஸ்ரீ நகரில் தொடங்கி, அமர்நாத் குகைகளை நோக்கி செல்லும் மலையேற்றப் பாதை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் மிகவும் புகழ் பெற்ற பாதையாகும். டச்சிகாம் தேசிய பூங்கா மற்றும் பாஹல்காம் ஆகிய சுற்றுலா தலங்கள் இன்ப சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடங்களாகும்.

PC: Nikhil S

கண்கவர் வண்ண மலர்கள்

கண்கவர் வண்ண மலர்கள்

தால் ஏரியின் கரையில் அமைந்திருக்கும் முதன்மையான சுற்றுலா தலங்களில் ஒன்றாக இந்திரா காந்தி துலிப் தோட்டம் உள்ளது. 90 ஏக்கர் பரப்பளவிலான இந்த தோட்டம், 70 வகைகளில் துலிப் மணி மலர்களை கொண்ட இடமாகும்

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 5 முதல் 15-ம் நாள் வரை நடக்கும் 'துலிப் திருவிழா' இங்குள்ள மக்களிடையே சற்று பிரபலமான பண்டிகையாகும். நாடு முழுவதுமுள்ள சுற்றுலா பயணிகளை மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளையும் வர வைக்கும் திருவிழாவாக இது உள்ளது.

ஓடை

ஓடை

வெள்ளி உருகி ஓடுவதைப் போல அழகான நதியும் அதனை கடக்கும் மக்களும்

PC: Guptaele

உணவுவகைகள்

உணவுவகைகள்

அரிசியை மையமாக வைத்தே பெரும்பாலான உணவுகள் பரிமாறப்படும் ஸ்ரீ நகரின் உணவு வகைகள் சற்று காரமாகவே இருக்கும். இந்நகரத்தில் தயாரிக்கப்படும் குங்குமப்பூ மிகவும் உயர்தரம் மற்றும் விலையைக் கொண்டது.

மிகவும் உயர்ந்த வாசனைப் பொருளாக கருதப்படும் குங்குமப்பூ-வினை சுற்றுலா பயணிகள், விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்க முடியும். ஒரு கிராம் குங்குமப்பூவின் விலை இந்திய மதிப்பில் சுமார் 200 ரூபாயாகும்.

PC: GracinhaMarco Abundo

புல்வெளியில் பூக்கள்

புல்வெளியில் பூக்கள்

Pc: : Saravask

நதிக்கரை வீடுகள்

நதிக்கரை வீடுகள்


PC: Soumyadeep Paul

ஸ்ரீநகரின் அழகிய காட்சி

ஸ்ரீநகரின் அழகிய காட்சி

PC: Achim Voss

 படகுகள்

படகுகள்


PC: Basharat Alam Shah

சோலையில் ஒரு ஜோடி

சோலையில் ஒரு ஜோடி

PC: Soumyadeep paul

செம்மறி ஆட்டுக்கூட்டம்

செம்மறி ஆட்டுக்கூட்டம்

PC: Basharat Alam Shah

மிதக்கும் சந்தைகள்

மிதக்கும் சந்தைகள்


PC: Basharat Alam Shah

அழகிய நதி

அழகிய நதி


PC: Basharat Alam Shah

வழிபாட்டுத் தளம்

வழிபாட்டுத் தளம்


PC: Basharat Alam Shah

 பாரி மஹால்

பாரி மஹால்

PC: Basharat Alam Shah

 புனித நீர்

புனித நீர்

Pc: Clara Giraud

ஒய்யார நடைபோடும் பெண்கள்

ஒய்யார நடைபோடும் பெண்கள்

PC: Basharat Alam Shah

தனியாய் படகோட்டும் பெண்

தனியாய் படகோட்டும் பெண்

Pc: Fulvio Spada

காஷ்மீர் காய்கறிகள்

காஷ்மீர் காய்கறிகள்


PC: Basharat Alam Shah

படகில் உல்லாச பயணம்

படகில் உல்லாச பயணம்

Pc: BOMBMAN


உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X