Search
  • Follow NativePlanet
Share
» »மாதவிடாய் உண்டாகும் பெண் கடவுள் எங்கிருக்குன்னு தெரியுமா? காமாக்யா ஆலயத்தைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்

மாதவிடாய் உண்டாகும் பெண் கடவுள் எங்கிருக்குன்னு தெரியுமா? காமாக்யா ஆலயத்தைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்

மாதவிடாய் உண்டாகும் பெண் கடவுள் எங்கிருக்குன்னு தெரியுமா? காமாக்யா ஆலயத்தைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்!!

By Balakarthik Balasubramanian

தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆலயத்தில் குறிப்பிட்ட மாதத்தில் மட்டும் இரத்தம் வழிகிறது என்று சொன்னால் அதனை உங்களால் நம்ப முடிகிறதா? ஓஹோ நம்ப முடியவில்லையா...அப்படி என்றால் கீழ்க்காணும் பத்தியை நீங்கள் படிப்பதன் மூலம் நம்பிக்கை நிரம்ப...கடவுள் முன்னால் சரணடைந்து பக்தியுடன் இந்த ஆலயத்தை காண புறப்படுவீர்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

யாத்திரை தளங்கள் அதிகம் கொண்டுள்ள ஒரு நாடான இந்தியாவில்பல இடங்கள் மிகவும் தனித்தன்மையுடனும், பல இடங்கள் அங்குள்ள அதிசயங்களை தாங்கி கொண்டு நம்மை கடவுள் நோக்கி அழைத்து சென்று அவனின் செயல்களால் வாயடைத்து போய் பிரமிப்புடன் நிற்க வைக்கிறது. குவஹாத்தியில் காணப்படும் அப்பேற்ப்பட்ட ஒரு ஆலயத்தின் சிறப்பை தான் நாம் இப்பொழுது பார்க்கபோகிறோம்.

காமாக்யா தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம், வந்து செல்வோரை வாயடைத்து போய் பிரம்மிப்புடன் நோக்க வைத்து கடவுளின் சக்தியை உணர வைக்கிறது.
தேவிக்காக எவ்வளவு கோவில்கள் அர்ப்பணிக்கப்பட்டு நிறுவப்பட்டாலும்...அவற்றுள் ஒன்றான இங்கே காணப்படும் தேவி... தனித்தன்மை நீங்கா தன்மையுடனும் மெய் சிலிர்க்கும் சிலையுடனும் காட்சியளித்து காண்போரை பக்தி பரவசமடைய செய்கிறது. ஆம், இங்கே நாம் வருவதன் மூலம் யோனி (அ) வாஜினா தேவியை நாம் வணங்குகிறோம்.

மாதவிடாய் உண்டாகும் பெண் கடவுள் எங்கிருக்குன்னு தெரியுமா? காமாக்யா ஆலயத்தைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்

Deeporaj

குவஹாத்தியில் உள்ள நிலச்சல் மலைப்பகுதியில் காணப்படும் இந்த காமாக்யா ஆலயம் இங்கே உள்ள மதவழிப்பாட்டு தளங்களுள் ஒன்றாகவும் தனித்தன்மை நீங்கா தோற்றத்துடனும் காணப்படுகிறது. 51 சக்தி பீடங்களுள் ஒன்றாக கருதப்படும் இந்த ஆலயம், சக்தியின் சடலத்தை சிவன் தன் தோள்களில் சுமந்து கொண்டு சென்றபோது தாண்டவத்தை தொடங்கியதாகவும் நம்பப்படுகிறது.

விஷ்ணு மகாப்பிரபு, தன்னிடம் உள்ள சுதர்சன சக்கரத்தை கொண்டு அந்த சடலத்தை பல துண்டுகளாக வெட்டினார் என்றும் கதைகள் கூறப்படுகிறது. அப்பொழுது சக்தியின் வயிற்றிலிருந்து கர்ப்பம் இந்த தளத்தில் கலையுண்டதாகவும் வரலாறு கூறுகிறது.

இந்த காமாக்யா ஆலயத்தை நாம் காண ஏதுவான மாதங்கள்:
இந்த ஆலயத்தை வருடத்தில் எந்த மாதத்தில் வேண்டுமென்றாலும் சென்று காணலாம். ஆனாலும், இந்த சன்னதி வருடத்தில் ஒரு சில நாள்கள் மூடியே இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

அந்த சமயங்களில் எந்த சடங்குகளும் நடத்தப்படுவதில்லை என்றும், இருப்பினும் இந்த சமயத்தில் பல பக்தர்கள் இங்கே வருகிறார்கள் என்றும் அங்குள்ளவர்கள் இந்த ஆலயத்தின் பெருமையை பறைசாற்றுகின்றனர்.

மாதவிடாய் உண்டாகும் பெண் கடவுள் எங்கிருக்குன்னு தெரியுமா? காமாக்யா ஆலயத்தைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்

Vikramjit Kakati

இந்த ஆலயத்தின் தோற்றம் பற்றி ஒரு சில தகவல்கள்:

இந்த ஆலயம் 8லிருந்து 17ஆம் நூற்றாண்டுக்குள் கட்டப்பட்டதாக வரலாற்று சுவடுகள் நமக்கு தெரியபடுத்துகிறது. அதன் பிறகு இந்த ஆலயம், பலமுறை புதுப்பிக்கப்பட்டு இப்பொழுது பக்தர்களுக்கு இனிமையான தோற்றத்துடன் காட்சியளிப்பதாகவும் கூறுகின்றனர். இந்த ஆலயத்தின் தோற்றம்...நிலச்சல் கட்டிடக்கலை பானியில் இருக்க... இந்த ஆலயத்தின் கோபுரம், கோள வடிவத்தில் காணப்படுகிறது. அதேபோல் இந்த ஆலயத்தின் அடிவாரம் சிலுவை வடிவத்துடனும் அமைக்கப்பட்டுள்ளது.

கிடைத்த சில தகவல்களையும் ஆதாரங்களையும் வைத்து பார்க்கும்பொழுது,,, இந்த ஆலயத்தின் முக்கிய தளத்தை இடிபாடுகளை கொண்டு உள்ளூர் ஆட்சியாளர்களால் மீண்டும் கட்டப்பட்டு விட்டு சென்றதாக நமக்கு தெரிய வருகிறது. இப்பொழுது உள்ள இந்த ஆலயத்தின் வடிவத்தை 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மாதவிடாய் உண்டாகும் பெண் கடவுள் எங்கிருக்குன்னு தெரியுமா? காமாக்யா ஆலயத்தைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்

Neptune8907

மேலும் இந்த ஆலயம், கோச் வம்சத்தின் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது என்றும், பாதுகாப்பிற்க்காக புதுப்பிக்கப்படுகிறது என்றும் வரலாற்றின் மூலம் நமக்கு தெரியவருகிறது.

ஒரு புராணத்தின் படி நமக்கு தெரிய வருவது என்னவென்றால், கோச் வம்சாவளிகளால் இந்த ஆலயம் வழிபட தடை செய்யப்பட்டு தேவியை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

அதனால் தெய்வத்தின் அச்சம் காரணமாக...கோச் வம்சாவளியால் இந்த காமாக்யா மலையின் வழியாக செல்ல கூட இன்று வரை பயம் கொண்டு நடுங்குகிறார்கள் எனவும் அங்கிருப்பவர்கள் உரைக்க நாம் கேட்கிறோம்.

மேலும் இந்த ஆலயம், காசி பழங்குடியினரின் பண்டைய தியாகம் என்றும் இன்றுவரை போற்றப்பட்டு வருகிறது. இங்கே உள்ள தேவிக்கு காணிக்கை தருவதற்காக ஒரு ஆட்டை ஒவ்வொரு காலைப்பொழுதிலும் இவர்கள் பலி தருவதாகவும் கூறப்படுகிறது.

மாதவிடாய் உண்டாகும் பெண் கடவுள் எங்கிருக்குன்னு தெரியுமா? காமாக்யா ஆலயத்தைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்

Arup Malakar

புராணம் பற்றிய சிறு குறிப்பு:

வேதப் புத்தகங்களின் படி...இந்த ஆலயம் பற்றி நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால்...சத்தி தேவி தன் ஆசைக்கிணங்க சிவபெருமானை கட்டி அணைக்க இங்கே வந்ததாகவும், சிவதாண்டவம் ஆடியபடி சக்தியின் உடலை சுமந்து கொண்டு சிவபெருமான் வர...அப்பொழுது அவளுடைய கர்ப்பம் கலைந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் வேதங்களின் மூலம் உணரப்படுவது....இந்த காமாக்யா, 4 சக்தி பீடங்களுள் ஒன்றாகவும், மற்ற மூன்றும்... பூரியில் உள்ள விமலா ஆலயத்திலும், பிரம்மபுரா அருகில் உள்ள தரா தரினி ஆலயத்திலும், கொல்கத்தாவில் உள்ள தக்கினா கலிகா ஆலயத்திலும் அமைந்திருப்பதாகவும் நமக்கு தெரிய வருகிறது.

மாதவிடாய் உண்டாகும் பெண் கடவுள் எங்கிருக்குன்னு தெரியுமா? காமாக்யா ஆலயத்தைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்

Subhashish Panigrahi

நான் முன்னர் குறிப்பிட்டது போல்...குறிப்பட்ட காலத்தில் இந்த ஆலயத்தின் வழிபாடுகள் நிறுத்தப்படுவதாகவும், இருப்பினும் சம்பிரதாயங்களும் ஆலயத்தின் பக்தர்கள் வழிபாடும் எப்பொழுது இந்த யோனி தேவியின் முன்பு நடத்தப்படுவதாகவும் அதற்கான சுவாரஷ்யமான தகவல்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாகவும் நம் செவிக்கு செய்திகள் எட்டும்பொழுது, 'அது என்ன?' என்னும் ஏக்கம் மனதில் எழ தான் செய்கிறது. அது என்னவென்றால்...எந்நேரத்திலும் இந்த யோனி தேவியின் மீது படிந்திருக்கும் ஈரமே ஆகும்.

தனித்துவம் கொண்ட அம்புபாச்சி திருவிழா:

மாதவிடாய் உண்டாகும் பெண் கடவுள் எங்கிருக்குன்னு தெரியுமா? காமாக்யா ஆலயத்தைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்

Deeporaj

இந்த ஆலயத்தின் சிறப்பாக அம்புபாச்சி திருவிழா அமைந்து நம்மை ஆச்சரியம் நோக்கி இழுத்து செல்கிறது. இந்த நேரத்தின்போது தான் தேவி, மாதவிடாய் சுழற்ச்சியில் ஈடுபடுவதாக இந்த ஆலயத்தின் சிறப்பை நாம் உணரும்போது கண்கள் அதிசயித்து அகன்றே பார்க்கிறது. அந்த மூன்று நாட்கள் மூடப்படும் இந்த ஆலயம், மீண்டும் நான்காவது நாள் திறக்கப்பட்டு பெரிய முறையில் கொண்டாடப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இக்கோயிலின் இயற்கை நீரூற்று, இந்த நேரங்களில் சிவப்பு நிறமாக மாறும் என்று கூறப்படுகிறது. ஆம், தேவியின் மாதவிடாய் சுழற்ச்சி காரணமாக இரத்தம் அவள் மேல் வழிவதாகவும், அதனாலே இந்த ஆலயம் அந்த மூன்று நாட்கள் மூடப்படுவதாகவும் சொல்லும்பொழுது...கடவுளின் மேல் நம்பிக்கை அற்றவர்களும் இந்த ஆலயத்தின் பெருமையை ஏந்தி கொண்டு பயணிக்க ஆசைகொள்கின்றனர் என்றும் நாம் கூறலாம்.

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X