Search
  • Follow NativePlanet
Share
» »கற்பூரம் காட்டும்போது கண்சிமிட்டும் பெருமாள் ஆச்சர்யம் நிகழும் கோயில்

கற்பூரம் காட்டும்போது கண்சிமிட்டும் பெருமாள் ஆச்சர்யம் நிகழும் கோயில்

கற்பூரம் காட்டும்போது கண்சிமிட்டும் பெருமாள் ஆச்சர்யம் நிகழும் கோயில்

உலகம் இயற்கையை நம்பி இருக்கிறது. இந்த இயற்கையை ஆட்டுவிப்பவன் ஒருவன் இருக்கிறான். அவன்தான் இறைவன் எனும் நம்பிக்கை கொண்டு இங்கு பல கோடி மனிதர்கள் தங்கள் வாழ்நாளை நகர்த்திக்கொண்டிருக்கின்றனர்.

இளைஞர் பட்டாளம் படையெடுக்கும் பாண்டிச்சேரி - இது கேரளாவுலங்கோ!இளைஞர் பட்டாளம் படையெடுக்கும் பாண்டிச்சேரி - இது கேரளாவுலங்கோ!

வாயில் இருந்து லிங்கம் எடுப்பது, வசியம் செய்வது போன்ற மாய நிகழ்வுகளை நிகழ்த்தி மக்களை தன்வசம் ஈர்க்கும் சாமியார்கள் போல அவ்வப்போது மாயங்கள் நிகழ்வதாக சில கோயில்களை குறித்த பேச்சு எழும். அப்படி வரும் செய்திகள் சிலருக்கு ஏமாற்றலாகவும், இன்னும் சிலருக்கு கடவுளின் அருளாகவும் தெரியும்.

கடவுளும் பேயும் ஒரே குகையில் காட்சி தரும் அதிசயம் எங்கே தெரியுமா?கடவுளும் பேயும் ஒரே குகையில் காட்சி தரும் அதிசயம் எங்கே தெரியுமா?

கடவுள் அருள்பாவிக்கிறார் என்பதை ஏதாவது ஒரு வகையில் காண்பித்துக்கொண்டே இருப்பார் . அப்படி அவர் வந்ததுதான் கரிவராஜ பெருமாள் கோயிலில் நிகழ்ந்த இந்த காட்சி.

அழகான அம்சங்களைப் பெற்றிருக்கும் பெண்கள் வாழும் டாப் 3 நகரங்கள் எவை தெரியுமா?அழகான அம்சங்களைப் பெற்றிருக்கும் பெண்கள் வாழும் டாப் 3 நகரங்கள் எவை தெரியுமா?

கற்பூர வெளிச்சத்தில் கண்மூடித் திறந்த பெருமாள். வாருங்கள் ஆன்மீகத்துக்குள் அதிசயித்துப்போவோம்.

தொடரும் மாய நிகழ்வுகள்

தொடரும் மாய நிகழ்வுகள்

இதுபோன்ற நிகழ்வுகள் அவ்வப்போது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருந்தாலும், ஒரு பிரிவினர் இதை நம்பாதீர்கள்,. ஏமாற்றுவித்தை என பழித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இறைவனை நம்பாதவர்களுக்கு அவன் ஒரு கல். அவனை ஆத்மார்த்தமோடு பூசித்தால் நம் கண்களுக்கும் புலப்படுவான் என்கிறது ஆன்மீகவாதிகளின் எண்ணம்.

பழிப்பவர்களை கண்டுகொள்ளாதீர்கள்... அதிசயத்துப்போங்கள் ஆன்மீகத்துக்குள் என்கிறார்கள் அவர்கள்.

 கரிவராஜ பெருமாள் கோயில்

கரிவராஜ பெருமாள் கோயில்

திருமாலின் அவதாரங்களுள் ஒன்றான இந்த பெருமாள் கோயில் நம் தலைநகராம் சென்னையில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த இடமாகப் பார்க்கப்படும் இந்த கோயிலுக்கு சனிக்கிழமையானால் ஒரு பெரும்படை திரண்டு வருகிறது. உங்களுக்குத் தெரியாததா திருமாலின் திருவிளையாடல்.

 கண்மூடி திறந்தார்

கண்மூடி திறந்தார்

இப்படித்தான் ஒரு சனிக்கிழமை இந்த கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர் திருமால் கண்மூடி திறப்பதாக அருகிலிருந்தவர்களிடம் கூறினார். ஆனால் யாரும் நம்பவில்லை.

 கற்பூர ஆரத்தி

கற்பூர ஆரத்தி

இந்த பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் கற்பூர ஆரத்தி காண்பித்து பூசை செய்வது வழக்கமான ஒன்றுதான். என்றாலும் அவருக்கு ஏதோ தெய்வாதிகமாக தோன்றியது போல கண்மூடி சிமிட்டியது தெரிந்திருக்கிறது. அவர் அதை அத்தோடு விடவில்லை. தன் குடும்பத்தையே கூட்டி வந்திருக்கிறார் அடுத்த சனிக்கிழமை.

 எங்குள்ளது

எங்குள்ளது

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஒரு சில கிமீ தொலைவில் உள்ள நெற்குன்றத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.

 பெருமாளின் அருள்

பெருமாளின் அருள்


அதன்பின்னர் அவரது குடும்பத்தினருக்கும், மற்ற சிலருக்கும் அதே நேரத்தில் பெருமாள் கண்சிமிட்டும் காட்சிகள் தென்பட்டிருக்கிறது.

 சிலையின் கண்ணில் அறிவியல்

சிலையின் கண்ணில் அறிவியல்

இப்படிப்பட்ட சிலைகள் மனிதர்களாலேயே செய்யப்படுபவை. இதனால் கண்கள் யதார்த்தமாக செய்யப்பட்டிருக்கும். அதுதான் கண்கள் சிமிட்டியது போன்ற உணர்வை தந்திருக்கும் என்பது அறிவியல் பார்வை.

 எல்லாருக்கும் தென்படுவதில்லை

எல்லாருக்கும் தென்படுவதில்லை

இந்த கண்கள் எல்லாருக்கும் தென்படுவதில்லை. கற்பூர ஆரத்தி காட்டும்போதுகூட சிலருக்கே தெரிகிறது. அதனால் இவை அறிவியலுக்கு அப்பாற்பட்ட பெருமாளின் செயல் என்று வியக்கின்றனர் பக்தர்கள்.

ஜெகந்நாத் கோயில்

ஜெகந்நாத் கோயில்

பூரியிலிருக்கும் ஒரு கோயிலின் கிளை என்றாலும் அது மிகையாகாது. அதற்கேற்ப அதே மாதிரியான சிறிய வகை கோயில் இது.

 பெசன்ட் நகர் பீச்

பெசன்ட் நகர் பீச்

இந்த கோயிலுக்கு மட்டும் சென்றுவிட்டு திரும்பாமல் அருகிலுள்ள பெசன்ட் நகர் பீச்சுக்கும் செல்லுங்கள் குடும்பத்துடன். அழகான கடற்கரையில் உங்கள் குடும்பத்தின் பொன்னான தருணங்கள் மகிழுங்கள்.

 மால்கள்

மால்கள்


சென்னையில் பலவகையான மால்கள் உள்ளன. ஆகஸ்ட் 2ம் தேதி சுயம்புலிங்கம் தன் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுவருவார் பாபநாசம் படத்தில். அப்படியே எல்லா இடத்தையும் சுற்றிப்பார்த்துவிட்டு வாருங்களேன். என்ன கெட்டுவிடப்போகிறது. நீங்கள் சம்பாரிப்பது உங்கள் குடும்பத்துக்குதானே.

 மெரினா கடற்கரை

மெரினா கடற்கரை


ஆசியாவின் மிக நீளமான கடற்கரைகளுள் ஒன்றை கட்டாயம் நீங்கள் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.

 பெங்களூரிலிருந்து செல்வதாக இருந்தால்

பெங்களூரிலிருந்து செல்வதாக இருந்தால்

345 கிமீ தொலைவில் உள்ள சென்னைக்கு ஏழு மணி நேர பயணம். சுற்றிப்பார்க்க பல வசதிகள் உள்ளன. வாரவிடுமுறை ஒன்றை தேர்ந்தெடுங்கள் ஜாலியாக பயணியுங்கள்.

அதிகம் பேர் படித்த கட்டுரைகள்

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X