Search
  • Follow NativePlanet
Share
» »பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ?

பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ?

பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் என்ன தெரியுமா?

பொருளாதாரம்,கட்டிடக்கலை,சிற்பக்கலை,வணிகம்,நாகரிகம்,விவசாயம்,கலாச்சாரம்,உணவு முறை,போர்ப்படை என்று அனைத்திலும் சோழ தேசம் மற்ற தேசத்தை காட்டிலும் பல மடங்கு முன்னேறி இருந்தது என்று முந்தைய பதிவில் பார்த்தோம்.

வெள்ளம் என்ன...கடலையே குடித்த அகத்தியர் கோயிலுக்கு செல்லலாம் வாருங்கள்வெள்ளம் என்ன...கடலையே குடித்த அகத்தியர் கோயிலுக்கு செல்லலாம் வாருங்கள்

1,30,000 டன் எடையுள்ள கற்களை கொண்டு கோவில் எழுப்ப வேண்டும் என்றால் கோவில் அஸ்திவாரம் எந்த அளவுக்கு பலமாக இருக்கவேண்டும். அதேபோல் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் 216 அடி கூர்நுனி வெற்று விமானம் .விமானத்தின் உச்சியில் கலசம். இது போக விமானத்தின் மேல் 8 நந்தி சிலைகள் வேறு. கட்டிடக்கலையின் உச்சபட்ச அறிவு இல்லாமல் இது சாத்தியம் ஆயிருக்காது.

7 வருட கட்டுமான பணிகளின் போது சோழர்கள் கையாண்ட நடைமுறை சிக்கல்கள் தெரியுமா?

இது போல இன்னும் பல மர்மங்கள் உங்களுக்காக காத்திருக்கு. முழுசா படியுங்கள்.

இதையும் படியுங்கள்:

 உலக கட்டிடக்கலைக்கே சவால் விடும் 10 கோடி கிலோ கோயில் மர்மங்கள் உலக கட்டிடக்கலைக்கே சவால் விடும் 10 கோடி கிலோ கோயில் மர்மங்கள்

72000 கிலோவை அந்தரத்தில் ஏற்றியது எப்படி?

72000 கிலோவை அந்தரத்தில் ஏற்றியது எப்படி?

கிட்டத்தட்ட 10 கோடி கிலோ எடையுள்ள கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கோயில் விமானத்தின் மீது 72 ஆயிரம் கிலோ கலசத்தை எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் புரியாத புதிராகத்தான் உள்ளது.

PC: Fovea Centralis

நுண்ணறிவு கணிதம்

நுண்ணறிவு கணிதம்

கலசத்தை ஏற்ற வேண்டும் என்றால் மிக பெரிய சாரத்தை கோவில் விமானம் சுற்றி கட்ட கட்டிடக்கலை நிபுணர்கள் எவ்வளவு துல்லியமாக ஆராய்ந்து இருப்பார்கள், இது போக எவ்வளவு கயிறு,மரக்கட்டை வேண்டும் என்றும் தீர்மானிக்க வேண்டும் , இவை அனைத்திற்கும் சிறந்த கணித அறிவு நிச்சயம் தேவைபட்டு இருக்கும்தானே

PC: vinayraj

 கைதிகளின் கட்டுக்கோப்பு

கைதிகளின் கட்டுக்கோப்பு


தஞ்சை பெரிய கோவிலை 7 வருடமாக ஒரு லட்சத்திற்குக்கும் மேற்பட்ட கைதிகளின் உதவியுடன் தான் கட்டியுள்ளனர், என்று வரலாறு கூறுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள ஒரு 10 பேரை ஒரு வேலையை செய்யப்பணிக்கவே எவ்வளவு கட்டுக்கோப்பான காவல் படை தேவைப்படும். அப்படி இருக்கையில் 1 லட்சம் பேரை கட்டுப்படுத்த சோழனின் காவல்படை எவ்வளவு சிறப்பாக செயல்பட்டிருக்கும்.

நிலநடுக்கத்தை தாங்கும் சக்தி

நிலநடுக்கத்தை தாங்கும் சக்தி

இப்போதுள்ள டிஎம்டி கம்பி விளம்பரங்களைப் போலல்லாமல் அத்த காலத்தில் நிலநடுக்கத்தை தாங்கும் விஞ்ஞானத்தையும் சோழர்கள் பெற்றிருந்ததாக வரலாறு கூறுகிறது.

அதாவது, பேஸ்மண்ட் எனப்படும் அஸ்திவாரம் ஆட்டம் காணாமல் இருக்க முழுக்க முழுக்க கடல் மண்ணால் நிரப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஐரோப்பிய ஆய்வாளர் ஒருவர் இதை பற்றி ஆய்வு செய்து கூறும்போது இதை வரலாற்றின் அசாத்தியம் என்று கூறியுள்ளார் என்றால் சோழனின் விஞ்ஞானம் எப்படி என்பதை ஊகியுங்கள்.

இதுவரை 6 நிலநடுக்கங்கள் ஏற்பட்ட போதும் அசராமல் நிற்கும் சோழனின் கம்பீரம்.

மனிதவள மேம்பாடு

மனிதவள மேம்பாடு

நம் பணிபுரியும் நிறுவனத்தின் 2000 ஊழியர்களை சமாளிக்கவே நம் HR கள் படாத பாடு படுகின்றனர். அப்படி இருக்கையில் ஒரு தேசத்தில் பசி பஞ்சம் வராமலும், பொருளாதாரம் தொடர்ந்து மேம்பாட்டில் இருக்க பாடுபட்டும், வல்லுனர்களுக்கு சலிப்பு ஏற்படாமல் கட்டட வேலை செய்யவும், நாட்டு மக்களும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கவும் சோழன் ராஜராஜனின் நிர்வாகத் திறமை உலகில் யாருக்கும் இல்லை என்பதையே பறைசாற்றுகிறது.

PC: Fovea Centralis

சோழர்கள் நெற்களஞ்சியம்

சோழர்கள் நெற்களஞ்சியம்

கோயில் கட்டுமான பணியில் 1 லட்சம் கைதிகள், ஆயிரத்திற்கு மேற்பட்ட யானை, குதிரை படைகள் மேலும் வீரர்கள், காவலர்கள், சிற்பிகள், ஓவியர்கள், மரவேலை, உலோக வேலைப்பாடு செய்பவர்கள் என இவர்கள் அனைவருக்கும் சாப்பாடு கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக தங்கு தடையின்றி கிடைத்துள்ளது என்றால் பாருங்கள் சோழனின் விவசாய திறமையை. பொருளாதார புரட்சியை...

மருத்துவ வசதி

மருத்துவ வசதி


சிறியதாக ஒரு கட்டடம் கட்டினாலே விபத்து என்பது சாதாரணமாகிவிட்டபோது, இவ்வளவு பெரிய கட்டுமானப் பணியின்போது எவ்வளவு மருத்துவ வசதிகள் கிட்டத்தட்ட 2 மூன்று லட்சம் பேர்களுக்கு என்றால் சோழன் மருத்துவத்திலும் புரட்சி செய்தவன்தானே

கிராணைட் கற்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன?

கிராணைட் கற்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன?

தஞ்சையை சுற்றி எந்த ஊரிலும் கிரானைட் கற்கள் இருப்பதாக செய்திகள் இல்லை. அப்போது திருச்சி அருகே இருந்து கற்கள் கொண்டுவரப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

ஐம்பது கிமீ தொலைவுக்கு அவ்வளவு எடையுள்ள கற்களை கொண்டு வரவேண்டுமென்றால் சோழனின் சாலை போக்குவரத்து வசதிகள் எப்படி மேம்பட்டிருந்திருக்கும். இல்லையா?

எதிரிகளை சமாளிப்பது எப்படி?

எதிரிகளை சமாளிப்பது எப்படி?


7 வருடம் கோவில் கட்டுமானப் பணிகளின்போதும் தொடர்ச்சியாக போர்களும் நடந்து இருக்க வாய்ப்பிருக்கிறது. அதில் கண்டிப்பாக , வெற்றியும் அடைந்து இருக்கவேண்டும் . எதிரிநாட்டு படையெடுப்பையும் தடுத்து கோயிலை முழுமையாக கட்டி இருக்க வேண்டும் என்றால் ராஜராஜனின் இராணுவ ஆற்றலை பாருங்கள்.

பெண்களின் அரசியல்

பெண்களின் அரசியல்

அரசியலுக்கு பெண்கள் சரியில்லை என்று இன்றளவிலும் பேச்சு நடைபெறுகிறதே. ஆனால் அன்றைக்கே பெண்களிடம் அரசியல் மற்றும் அதிகாரத்தை கொடுத்து இருக்கும் ராஜராஜனின் பெருமைகளை நாம் மறந்து விடலாமா?

ஆண்கள் கோயில் கட்டுமானத்தில் ஈடுபட்டபோது இளவரசிகள் நாட்டை ஆண்டார்கள் எனவும், அரசுப் பணிகளில் பல பெண்கள் ஈடுபட்டார்கள் எனவும் தெரிகிறது.

மேலும் தெரிந்து கொள்ள கிளிக் செய்யவும்

உலகையே ஆண்ட சோழ ராஜ்ஜியம் படிப்படியாக வீழ்ந்த இடங்கள் பற்றி தெரியுமா?உலகையே ஆண்ட சோழ ராஜ்ஜியம் படிப்படியாக வீழ்ந்த இடங்கள் பற்றி தெரியுமா?

2020ல் உலகம் என்னவாகும் கைப்பட எழுதிய தலையாட்டி சித்தர்2020ல் உலகம் என்னவாகும் கைப்பட எழுதிய தலையாட்டி சித்தர்

ஏழுமலையானின் வியப்பூட்டும் மர்மங்கள் குறித்து தெரியுமா?(விடியோ)ஏழுமலையானின் வியப்பூட்டும் மர்மங்கள் குறித்து தெரியுமா?(விடியோ)

நாசாவே வியக்கும் இந்த சிவன் கோவில் மர்மங்கள் உங்களுக்கு தெரியுமா?நாசாவே வியக்கும் இந்த சிவன் கோவில் மர்மங்கள் உங்களுக்கு தெரியுமா?

பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ?பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ?

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X