Search
  • Follow NativePlanet
Share
» »கோவை நகரின் அரிய புகைப்படங்கள்

கோவை நகரின் அரிய புகைப்படங்கள்

By Super Admin

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை கொங்கு நாட்டின் தலைநகராகும். வானம் பார்த்த பூமி தான் என்றாலும் அங்கு வாழும் மக்களின் கடுமையான உழைப்பினால் பொன் விளையும் பூமியாக இன்று மாறியுள்ளது. தொழில்துறை, கல்வி, மருத்துவம், சுற்றுலா, போன்ற துறைகளில் மிகுந்த வளர்ச்சியடைந்த நகரமாக திகழும் கோவை மாநகரம் வாழ்வதற்கும் மிக இனிமையான இடங்களில் ஒன்றாகும்.

பல ஊர்களில் இருந்தும் இங்கே வரும் மக்கள் திரும்பிபோக மனமில்லாமல் கோயம்பத்தூரிலேயே தங்கி விடுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இன்னும் சில நாட்களில் கோவை மாநகரம் தனது 210ஆவது பிறந்த நாளை கொண்டாடவிருக்கிறது. அதனை ஒட்டி கோவை நகரின் சில அறிய பழைய புகைப்படங்களின் தொகுப்பை காண்போம் வாருங்கள்.

பேரூர் பட்டீஸ்வரர் கோயில் :

பேரூர் பட்டீஸ்வரர் கோயில் :

கோயம்பத்தூரில் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் பழமையான சைவ திருத்தலமான பேரூர் பட்டீஸ்வரர் கோயிலின் பழைய புகைப்படம்.

Photo

கோவை மத்திய சிறை :

கோவை மத்திய சிறை :

தமிழ் நாட்டில் இருக்கும் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்றான கோவை மத்திய சிறைச்சாலையின் பழைய புகைப்படம் இது. வானில் இருந்து மொத்த சிறை வளாகமும் தெரியும்படி எடுக்கபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Photo:

அவினாசி சாலை :

அவினாசி சாலை :

இன்றைய கோவையின் நாடித்துடிப்பாக இருக்கும் அவினாசி சாலையின் அரிய புகைப்படம். எந்நேரமும் மிகவும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் இன்றைய காலகட்டத்தில் இப்படியொரு காட்சியை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது அல்லவா?

Photo

ஆங்கிலேயர் காலத்து உணவகம்:

ஆங்கிலேயர் காலத்து உணவகம்:

ஆங்கிலேயர் காலத்தில் கோவையில் செயல்பட்டு வந்த பிரபலமான ஒரு உணகவத்தின் புகைப்படம்.

Photo:

ரேஸ் கோர்ஸ் தேவாலயம் :

ரேஸ் கோர்ஸ் தேவாலயம் :

கோயம்பத்தூரின் அதி முக்கியமான பகுதிகளில் ஒன்றான ரேஸ் கோர்ஸில் 1870ஆம் ஆண்டு கட்டப்பட்ட கிறிஸ்துவ தேவாலயம் ஒன்றின் புகைப்படம்.

Photo

ஸ்டேன்ஸ் மில் :

ஸ்டேன்ஸ் மில் :

கோயம்பத்தூரின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தைவை என்றால் அவை நிச்சயம் பஞ்சாலைகள் தான். அப்படி கோயம்பத்தூரில் முதன்முதலில் அமைக்கப்பட்ட பஞ்சாலைகளில் ஒன்றான 'ஸ்டேன்ஸ்' மில்லின் புகைப்படம்.

Photo

ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் :

ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் :

பாப்பநாயக்கன் பாளையத்தில் இருக்கும் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலின் 'கழுகுப்பார்வை' புகைப்படம்.

Photo:

கோயம்பத்தூர் ரயில் நிலையம்

கோயம்பத்தூர் ரயில் நிலையம்

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோவை ரயில் நிலையத்தில் அரிய புகைப்படம்.

Photo:

டவுன் ஹால் :

டவுன் ஹால் :

கோயம்பத்தூரின் மிகவும் நெரிசல் மிகுந்த பரபரப்பான பகுதிகளில் ஒன்றான டவுன் ஹாலின் பழமையான புகைப்படம்.

Photo:

ஸ்டேன்ஸ் :

ஸ்டேன்ஸ் :

கோவையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய ஆங்கிலேயரான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் அவர்களின் புகைப்படம்.

Photo

ஒப்பனக்கார வீதி மசூதி :

ஒப்பனக்கார வீதி மசூதி :

கோவை டவுன் ஹால் பகுதியில் இருக்கும் ஒப்பனக்கார வீதியில் உள்ள மசூதியின் பழமையான ஓவியம்.

Photo:

ரேஸ் கோர்ஸ் :

ரேஸ் கோர்ஸ் :

கோவையில் வி.ஐ.பி அந்தஸ்து பெற்ற இடமான ரேஸ் கோர்ஸ் பகுதியின் பழைய புகைப்படம். இன்றைய ரேஸ் கோர்ஸையும் புகைப்படத்தில் இருக்கும் இடத்தையும் ஒப்பிட்டு பார்க்க முடிகிறதா உங்களால் ??

கட்டவண்டி போராட்டம்

கட்டவண்டி போராட்டம்

1973ஆம் ஆண்டு கோவை ஆட்சியர் அலுவலகத்தின் முன்னால் நடைபெற்ற கட்டவண்டி போராட்டத்தின் புகைப்படம்.

ஸ்டேன்ஸ் பள்ளி :

ஸ்டேன்ஸ் பள்ளி :

கோவை நகரின் ஐகானிக் அடையாளங்களில் ஒன்றாக திகழும் நூற்றாண்டுகள் கடந்த ஸ்டேன்ஸ் பள்ளியின் பழைய புகைப்படம்.

Photo

Read more about: coimbatore old photos tamilnadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X