Search
  • Follow NativePlanet
Share
» »ராஜஸ்தானின் ரகசியங்கள் !!

ராஜஸ்தானின் ரகசியங்கள் !!

By Naveen

ராஜஸ்தான், இந்தியாவில் இருக்கும் மிகவும் வறட்சி மிகுந்த மாநிலம் ஆகும். பரப்பளவில் பெரியது என்றாலும் அதில் முக்கால்வாசி பாலைவனத்தால் சூழப்பட்டிருக்கிறது. பெரிய அளவில் விவசாயமோ அல்லது வேறு வளங்களோ இல்லாவிட்டாலும் இங்கு தான் இந்தியாவின் பணக்கார ராஜ்ஜியங்கள் ராஜஸ்தானில் தான் இருந்திருக்கின்றன. இன்றும் இந்தியாவில் அதிகளவில் அரண்மனைகள் இருப்பது இந்த மாநிலத்தில் தான்.

அதேபோல இந்தியாவில் எண்ணற்ற சுற்றுலாத்தலங்கள் இருந்தாலும் அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருவதும் ராஜஸ்தானுக்கே. எப்படி இது சாத்தியம்?. ராஜஸ்தான் இந்தியாவின் சுற்றுலாத் தலைநகரம் என்று ஏன் அழைக்கப்படுகிறது?. அதற்க்கான காரணங்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

உலகின் ஒரே பிரம்மா கோயில்!!

உலகின் ஒரே பிரம்மா கோயில்!!

ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் என்ற இடத்தில் உலகில் பிரம்மாவிற்கு இருக்கும் ஒரே கோயிலானது அமைந்திருக்கிறது.

கார்த்திகை மாதத்தில் இந்தியா முழுக்க இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு யாத்திரை வருகின்றனர். புஷ்கர் கோயிலுக்கு அருகிலேயே இருக்கும் புனித குளத்தில் ஸ்நானம் செய்த பிறகு பக்தர்கள் கோயிலுக்குள் சென்று வழிபடுகின்றனர்.

ஒட்டக சவாரி:

ஒட்டக சவாரி:

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான நகரங்களில் ஒன்று ஜெய்சால்மர் ஆகும். பாலைவனத்தை ஒட்டி அமைந்திருக்கும் இந்நகரில் ஒட்டக சவாரி மிகவும் பிரபலம்.

வெளியில் அதிகம் இல்லாத மாலை நேரத்திலோ அல்லது விடி காலையிலோ பாலைவனக் கப்பல் என்றழைக்கப்படும் ஒட்டகங்களின் மேல் அமர்ந்து பாலைவன மணலில் பயணம் செல்வது கடலில் மிதப்பது போல இருக்கும்.

Stephen Bugno

ஒட்டக சவாரி:

ஒட்டக சவாரி:

ஒட்டகத்தின் மேல் அமர்ந்தபடி வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் எடுத்த புகைப்படம் இது.

இந்தியாவிலேயே ஒட்டக சவாரி இங்கு மட்டும் தான் இருக்கிறது என்பதும் இங்கே சுற்றுலாப்பயணிகள் அதிகம் வர ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

Nick Woodford

நீல நகரம்:

நீல நகரம்:

ஜெய்சால்மரை போலவே ராஜஸ்தானில் இருக்கும் மற்றுமொரு முக்கிய சுற்றுலாத்தலம் தான் ஜோத்பூர் ஆகும். மிகுந்த ராஜ பாரம்பரியம் உள்ள இந்நகரம் நீல நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.

காரணம் இந்நகரின் மையத்தில் இருக்கும் மேஹ்ரங்கர்க் கோட்டையை சுற்றிலும் இருக்கும் வீடுகள் அனைத்திற்கும் நீல நிற வர்ணம் பூசப்பட்டிருப்பது தான்.

Phil Robinson

நீல நகரம்:

நீல நகரம்:

மேஹ்ரங்கர்க் கோட்டையின் மேல் இருந்து பார்க்கும் போது அத்தனை அட்டகாசமாக இந்நகரம் காட்சியளிக்கிறது.

இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய கோட்டைகளுள் ஒன்றானமேஹ்ரங்கர்க் கோட்டையின் உள்ளே ஜோத்பூர் ராஜ பரம்பரையினர் பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

Flip Nomad

நீல நகரம்:

நீல நகரம்:

பிரம்மாண்டமான மேஹ்ரங்கர்க் கோட்டை !!

Kenny Lam

அம்பர் கோட்டை யானை சவாரி:

அம்பர் கோட்டை யானை சவாரி:

ராஜஸ்தான் தலைநகரான ஜோத்பூரில் இருக்கிறது அம்பர் கோட்டை. மிகுந்த வேலைப்பாடுகளுடன், ராஜஸ்தான் கட்டிடக்கலையின் அனைத்து சிறப்பம்சங்களையும் உள்ளடக்கி கட்டப்பட்டிருக்கும் இக்கோட்டைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அக்கால ராஜஸ்தானிய அரசர்கள் போல யானையின் மீது சவாரி செய்து மகிழலாம்.

உலகின் மிகப்பெரிய கால்நடை சந்தை:

உலகின் மிகப்பெரிய கால்நடை சந்தை:

ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் நகரில் வருடா வருடம் நவம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் விர்ப்பனைக்காக கொண்டுவரப்படும் உலகின் மிகப்பெரிய கால்நடை சந்தை நடைபெறுகிறது.

ஒட்டங்கங்கள், குதிரைகள், ஆடு, மாடுகள் என அனைத்துவிதமான கால்நடைகளும் இங்கே சந்தைப்படுத்தப்படுகின்றன.

உலகின் மிகப்பெரிய கால்நடை சந்தை:

உலகின் மிகப்பெரிய கால்நடை சந்தை:

வெறும் சந்தையாக மட்டுமில்லாது சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக ஒட்டக அழகிப்போட்டி, குதிரைப்பந்தையம், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி போன்றவை நடைபெறுகின்றன.

ராஜஸ்தானில் தவற விடக்கூடாத விஷயங்களில் இது முக்கியமானது ஆகும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X