Search
  • Follow NativePlanet
Share
» »கடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா? - ஆயிரமாயிர வருட நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் #NPH 8

கடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா? - ஆயிரமாயிர வருட நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் #NPH 8

கடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா? - ஆயிரமாயிர வருட நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள்

By Udhaya

ஏலியன்கள் இருக்கிறார்களா இல்லையா என்ற வாதமே ஒரு முடிவு கிடைக்காமல் போய்க்கொண்டிருக்கும்போது, உலகெங்கும் கிடைக்கும் தகவல்கள் வேற்று கிரகவாசிகளின் இருப்பை உறுதி செய்வதுபோல் இருக்கின்றன. இவை குறித்து தெளிவான முடிவுகள் கிடைக்காவிட்டாலும்கூட, அவ்வப்போது வெளியாகும் இந்த தகவல்கள் ஒரு வேளை ஏலியன்கள் இருக்கிறார்களோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது. அதிலும் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் தன் கருத்தை வெளியிட்டபிறகு ஒரு வித அச்சம் நிலவி வருவது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. இவையெல்லாம் தற்காலத்தில். ஆனால் நம் நாட்டில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏலியன் குறித்த தகவல்கள் பரவி கிடைக்கின்றன என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அதிலும் இந்த ஒரு இடம் ஏலியனுக்கான இருப்பை நூறு சதவிகிதம் நம்பும்படி உங்களை கொண்டுசென்றுவிடும். வாருங்கள் அந்த இடத்துக்கு செல்லலாம். இது நேட்டிவ் பிளானட் ஹிஸ்டரி Native Planet History

ஏலியன் உருவங்கள்

ஏலியன் உருவங்கள்


இந்தியாவில் 10 ஆயிரம் வருடங்கள் பழைய பாறை ஓவியங்களில் ஏலியன்களைப் பற்றிய குறிப்பு இருக்கிறது என்ற செய்தி உங்களை வந்தடைந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள். அப்படியா என்று உங்களுக்குள் ஒரு ஆச்சர்யம் தோன்றும் அல்லவா. அப்படித்தான் இந்த இடத்தைத் தேடிச் சென்றோம் நாங்கள். உண்மையில் சுற்றுலாவோடு கூடிய பொழுதுபோக்கு அம்சங்களுக்கு பயணப்பட்டு பழகிய நாம் இதுபோன்றதொரு வரலாற்று சிறப்பு மிக்க இடத்துக்கு செல்ல சற்று தயங்குமோம். ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த குகையில் ஏலியனின் உருவங்கள் வரையப்பட்டுள்ளன. அவை 10 ஆயிரம் வருடங்களுக்கு முன் வரையப்பட்டதாக இருக்கலாம் என்று அறியப்பட்டுள்ளது. அப்படியானால்?

 நாசா உதவியுடன்

நாசா உதவியுடன்

சத்தீஸ்கர் மாநிலம் சாராமா அருகே ஒரு மறைவிடத்தில் உள்ளது இந்த குகை. இந்த குகைக்குள் இருப்பவை வெகு காலமாகவே மர்மமாக இருந்து வந்தன. இதை பரிசோதிக்கும் முயற்சியில் இறங்கியது அம்மாநில அகழ்வாராய்ச்சி துறை. நாசா உதவியோடு இந்த குகை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இங்கு பல நாட்கள் நடந்த ஆராய்ச்சியில் ஏலியன் உருவங்கள் பொறிக்கப்பட்ட ஓவியங்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது காண்பதற்கு திரைப்படங்களில் காட்டப்படும் ஓவியங்களைப் போலவே இருந்தது.

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

ராய்ப்பூரிலிருந்து 130 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இந்த குகை அமைந்துள்ள கிராமத்தின் பெயர் கொட்டிடோலா என்பதாகும்.

2.30மணி நேர பயணத் தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்தைச் சுற்றி பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்ததாக உள்ளன.

10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே

10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே

பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பே மனிதர்கள் வேற்றுகிரக வாசிகளை குறித்த எண்ணங்களை வைத்துள்ளனர் என்பதற்கு இது சான்றாகும். அப்படி பார்க்கையில், ஒரு வேளை அவர்கள் ஏலியன்களை பார்த்திருக்கலாம் அல்லது அவர்கள் குறித்து சிந்தித்து இந்த மாதிரியான உருவத்தை உருவாக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் சிறப்பான சுற்றுலாத் தளங்களைப் பற்றிய விவரங்களை உங்களுக்கு துல்லியமாக வழங்கி வருகிறது தமிழ் நேட்டிவ் பிளானட் இணையதளம். தொடர்ந்து இணைந்திருங்கள்.

 வழிபடும் கிராமத்தினர்

வழிபடும் கிராமத்தினர்

இந்த தகவல்கள் குறித்து உண்மையை நிலையை தெளிவாக துல்லியமாக விளக்கிக்கூறும் அளவுக்கு தேர்ந்தவர்கள் யாரும் இல்லை. ஆனால் அருகிலுள்ள கிராமங்களில் மக்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இதுபோன்ற உருவங்களை வணங்கி வந்தார்கள் என்று கூறப்படுகிறது.

அவர்கள் கூறும் கதைகள் கேட்பதற்கு காமிக்ஸ் கதைகள் போலிருந்தாலும், சமீபத்திய அறிவியலாளர்கள் கூறும் கூற்றுகளை தெள்ளத்தெளிவாக கூறுவதாக அமைகிறது. அது ஏலியன் வரவை குறிப்பதாகவும் அமைகிறது.

வேற்றுகிரக கடவுள்கள்

வேற்றுகிரக கடவுள்கள்

இக்கிராம மக்கள் கடவுள்களாக கூறுபவர்களுள் சில உருவங்கள் அப்படியே தற்கால அறிவியலாளர்கள் பயன்படுத்தும் ஏலியன் குறியீட்டு உருவத்தை ஒத்திருப்பது மிக அதிர்ச்சிகரமான விசயமாகவுள்ளது. இதுகுறித்து அதிக அளவில் வெளியில் செய்திகள் பரவவில்லை. இதனால் கடவுள் எனும் வரையறை உடைக்கப்படுமோ என்ற அச்சம் சிலருக்கு ஏற்பட்டிருக்கிறது என்றும் தெரிகிறது. ஆனால், இது கிராமத்தினரின் நம்பிக்கை மட்டும்தானே ஒழிய இதன் பின்னால் இருக்கு அறிவியல் உண்மைகள் நிரூபிக்கப்படவில்லை என்பதை நம் வாசகர்களுக்கு தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளோம்.

குகைக்குள் செல்வோமா?

குகைக்குள் செல்வோமா?

குறைந்த வெளிச்சத்தில் சென்றாலும் சில நிமிடங்களில் உள்ளே வெளிச்சம் தென்படுகிறது. சில குகைகள் அப்படி இருக்க, வெளியிலிருந்து பாறைகளில் காணமுடியவல்ல ஓவியங்களும் நம் கண்ணில் படுகின்றன. மிக மிக பழமையானவை என்பதால் அவை செம்மையாக இருக்கவில்லை. எனினும் ஏலியன் முகத்தை தெளிவாக காணமுடிகிறது.

Dick Clark

இயற்கை வண்ணம்

இயற்கை வண்ணம்

இந்த ஓவியங்கள் இயற்கை வண்ணத்தால் வரையப்பட்டுள்ளன. இத்தனை ஆண்டுகள் வரை முழுவதும் அழியாமலிருக்க ஏதோ ஒரு இயற்கை மூலிகைக் கலவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த ஓவியங்களைப் பார்க்கும்போது மனிதர்களாக இருக்கவாய்ப்பில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. அதாவது அவர்களுக்கு மூக்கு, வாய் போன்றவை இல்லை. சில ஓவியங்கள் விண்வெளி உடை அணிந்திருப்பது போன்றுகாணப்படுகிறது. இதைப் பார்த்ததும் ஒரு நிமிசம் தலையே சுத்திருச்சி..

அட... இது இருபதாம் நூற்றாண்டில் வரையப்பட்டதாக இருக்கும் என்றும் சந்தேகம் வந்தது.. ஆனால் சில ஆராய்ச்சியாளர்கள் இதன் வயதை ஆராய்ந்து சொல்லியிருப்பதால் நம்பினோம். அறிவியல்தானே நம்பித்தானே ஆகவேண்டும்.

Udaykumar PR

சுற்றுலாப் பயணம்

சுற்றுலாப் பயணம்


உற்சாகமூட்டும் விடுமுறை பொழுதுபோக்கு அனுபவங்களை அளிப்பதில் சத்தீஸ்கர் மாநிலத்திலேயே இந்த ராய்பூர் நகரம் முன்னணியில் உள்ளது. முன்னர் இப்பகுதியின் சுற்றுலா கவர்ச்சிகள் அவ்வளவாக வெளி உலகிற்கு தெரியவில்லை என்றாலும் தற்போது இந்தியா மற்றும் சர்வதேச அளவில் இந்த நகரம் பிரபல்யமடைந்துவருகிறது.

ராய்பூர் நகரில் கலவையான சுற்றுலா அம்சங்கள் நிரம்பியுள்ளன. தூததாரி மடாலயம், மஹந்த் கஸிதாஸ் மியூசியம், விவேகானந்தா சரோவர், விவேகானந்தா ஆஷ்ரம், ஷாதனி தர்பார் மற்றும் ஃபிங்கேஷ்வர் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. இங்குள்ள வரலாற்றுச்சின்னங்களும், புராதன சிதிலங்களும் வெளிநாட்டுப்பயணிகளை அதிக அளவில் ஈர்க்கின்றன.

நாகர் காடி எனும் இசைக்கடிகாரம் இந்த நகரத்தின் மையப்பகுதியில் ஒரு முக்கியமான சுவாரசிய அம்சமாக அமைந்திருக்கிறது. இது ஒவ்வொரு மணி நேரத்தையும் குறிக்கும் மணி ஓசைக்கு முன்னர் உள்ளூர் பாரம்பரிய இசையையும் ஒலிக்கிறது. இது தவிர இந்நகரத்தில் உள்ள ராஜிவ் காந்தி வன் & உர்ஜா பவன் எனும் வளாகம் முழு சூரிய மின்சக்தி பயன்பாட்டினை கொண்டுள்ளது.

Pankaj Oudhia

 தூததாரி மடாலயம்

தூததாரி மடாலயம்

ராமர் பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த தூததாரி மடாலயம் ராய்பூர் நகரத்தின் தென்பகுதியில் அமைந்திருக்கிறது. 17ம் நூற்றாண்டில் ஜைத்சிங் மன்னரால் கட்டப்பட்ட இந்த மடாலயம் இந்த சுற்று வட்டாரத்தில் மிகப்பிரசித்தமான ஆன்மீக மையமாக அறியப்படுகிறது. இது மஹாராஜ்பந்த் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த மடாலயத்துக்கு அருகிலேயே ஒரு கோயில் ஒன்றும் உள்ளது.

இந்த மடலாயத்தின் பெயர் குறித்த ஒரு சிறப்பு பின்னணியும் உண்டு. அதாவது பாலை மட்டுமே உணவாக கொண்டு வாழ்ந்த ஸ்வாம் பல்பத்ரா தாஸ் என்பவரின் நினைவாக இது ‘தூத் தாரி' என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் காணப்படும் அழகிய சுவரோவியங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன. சட்டிஸ்கருக்கு வருகை தரும் பயணிகள் ராய்பூரில் உள்ள இந்த தூததாரி மடாலயத்திற்கு மறக்காமல் சென்று வரவேண்டும்.

Theasg sap

மஹந்த் கஸிதாஸ் அருங்காட்சியகம்

மஹந்த் கஸிதாஸ் அருங்காட்சியகம்

சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள மிகச்சிறந்த அருங்காட்சியகங்களில் ஒன்றாக திகழும் இந்த மஹந்த் கஸிதாஸ் மியூசியம் ராய்பூர் நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. இது டி.கே மருத்துவமனைக்கு அருகில் அமைந்திருக்கிறது. ராஜா மஹந்த் கஸிதாஸ் என்பவரால் 1875ம் ஆண்டு இந்த மியூசியம் கட்டப்பட்டிருக்கிறது. இரண்டு அடுக்குகளுடன் கட்டப்பட்ட இந்த வளாகம் பின்னர் ஜோதி தேவி ராணி மற்றும் அவரது மகன் திக்விஜய் தாஸ் ஆகியோரால் 1953ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. தற்போது இந்த அருங்காட்சியக வளாகம் 2 ஹெக்டேர் அளவில் பரந்து காணப்படுகிறது. ஆயுதங்கள், புராதன நாணயங்கள், கல்வெட்டு குறிப்புகள், சிலைகள் மற்றும் சிற்பக்குடைவு வேலைப்பாடுகள் போன்றவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

Sameer.udt

விவேகானந்தா சரோவர்

விவேகானந்தா சரோவர்

விவேகானந்தா சரோவர் என்று அழைக்கப்படும் இந்த ஏரி ராய்பூர் நகரத்தில் உள்ள மிகப்பழமையான ஏரியாகும். இந்த நகரம் எந்த அளவுக்கு பழமையானதோ அதே அளவுக்கு இந்த ஏரியும் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிற்து. ராய்பூர் பகுதியின் மிகப்பெரிய ஏரி என்ற அடையாளத்தையும் இது கொண்டிருக்கிறது. 37அடி உயரமுள்ள விவேகானந்தா சிலை ஒன்று இந்த ஏரி ஸ்தலத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாண்டமான இந்த சிலை லிம்கா கின்னஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது. ஏரியிலிருந்து 2.7 கி.மீ தூரத்தில் ஸ்வாமி விவேகானந்தா ஆஷ்ரம் ஒன்றும் அமைந்திருக்கிறது. இது விவேகானந்தரின் கொள்கைகளை கற்பித்து பரப்பி வருகிறது.


Vivek Shrivastava

அராங்

அராங்


அராங் எனப்படும் இந்த புராதன நகரம் ராய்பூர் நகரத்திலிருந்து 36 கி.மீ தொலைவில் உள்ளது. பண்டதேவல் கோயில் மற்றும் மஹாமயா கோயில் எனப்படும் பழமையாக கோயில்கள் இந்நகரத்தில் அமைந்துள்ளன.

பண்டதேவல் கோயில் அதன் கட்டிடக்கலை அம்சங்களுக்கு புகழ் பெற்றுள்ளது. இதன் உள்ளே ஜைன தீர்த்தங்கரர்களின் மூன்று பிரம்மாண்ட கருங்கல் சிலைகளைக்காணலாம். இதே போன்று மஹாமயா கோயிலிலும் மூன்று பெரிய தீர்த்தங்கரர் சிலைகள் காணப்படுகின்றன. மேலும், 24 ஜைன தீர்த்தங்கரர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்ட ஒரு பெரிய கல் வடிவத்தையும் இங்கு பார்க்கலாம்.

தண்டேஷ்வரி கோயில், சண்டி மஹேஷ்வரி கோயில், பஞ்சமுகி மஹாதேவ் கோயில் மற்றும் பஞ்சமுகி ஹனுமான் கோயில் போன்றவையும் இந்த புராதன நகரத்தில் அமைந்திருக்கின்றன.

Joseph David Beglar

மகாநதி

மகாநதி

இந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்றான இந்த மகாநதி 860கிமீ நீளம் கொண்டதாகும். இது சாபுத்ரா மலைத்தொடர்களில் தொடங்கி, கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. சட்டிஸ்கர் மற்றும் ஒரிசாவில் இது அநேக இடங்களை வளமாக்குகிறது.

Kamalakanta777

Read more about: travel cave history
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X